1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: அட்வெந்து நாட்களுக்கு முந்தின ஞாயிறு
தேதி: 26/11/2023
வணைம்: பச்சை
திருமறைப்பாடம்.
பழைய ஏற்பாடு : ஓசியா 10: 12−15
புதிய ஏற்பாடு: கொலோசெயர் 4 : 1−6
நற்செய்தி பகுதி : லூக்கா 12:35−40
சங்கீதம் 37 : 1−24
2. திருவசனம் & தலைப்பு
ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தப்படுதல்
ஓசியா 10: 12
(பவர் திருப்புதல்) நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள். தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள். உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். கர்த்தர் வந்து உங்கள் மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும் அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
(திருவிவிலியம்) நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்.அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள். உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்.ஆண்டவர் வந்து உங்கள் மேல் நேர்மையை பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும்காலம் நெருங்கி வந்துவிட்டது.
3. ஆசிரியர் & அவையோர்
இந்த நூலை எழுதியவர் ஓசியா. இவர் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவாக்கு கூறினார். இந்த நூலின் மையக்கருத்து பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதாகும்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த நூல் கி.மு 755−கி.மு 710 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. சமாரியா வீழ்ச்சியுற்றதற்குமுன் எழுதப்பட்டிருக்கலாம் என்று வேத அறிஞர்களால் அறியப்படுகிறது. ஓசியா கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து அவரை விட்டு விலகிச் சென்றாள். அந்த பெண்ணோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னனியாகக் கொண்டு ஓசியா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்படியாமையை, நம்பிக்கைத்" துரோகத்தை எடுத்துரைத்தார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவனின் தண்டனை மற்றும் இறைவனின் பேரன்பு இறுதிவரை நிலைத்திருக்கும் அம்மக்கள் அவர் பக்கம் ஈர்த்துத் கொள்ளும்.அதன் மூலம் முறிந்த உறவு மலரும் என்று எடுத்துரைக்கிறார்.
5. திருவசன விளக்கவுரை
இந்த திருவசனத்தில் நீதியை விதையுங்கள். அதை அறுவடை செய்யுங்கள், அது பிறருக்கு பயனளிக்கும். ஆண்டவர் உங்களுக்கு நீதியையை அருளிச்செய்யும் வரைக்கும் அவரை தேட காலம் வந்துவிட்டது என்று ஓசியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களுக்கு இறைவாக்கு கூறுகிறார்.ஆண்டவரை தேட காலம் வந்து விட்டது ஆகையால் நீதி, நேர்மையை விதையுங்கள், பிறருக்கு நன்மை செய்யுங்கள் , பிறருக்கு உதவி செய்யுங்கள், என்ற நேர்மமையான வாழ்வை வாழ வேண்டும் என்று ஓசியா தீர்க்கதரிசி இறைவாக்குரைத்தார். இன்று ஆண்டவர் நம்மிடம் நேர்மையான வாழ்வை எதிர்பார்க்கிறார் என்று திருவசனம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. ஆகையால் நாம் ஆண்டவரை தேட ஆயத்தமாவோம். நீதியை விதைக்க, நன்மை செய்ய , உதவி செய்ய ஆயத்தமாவோம்.
6. இறையியல் & வாழ்வியல்
இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் திருச்சபைகளின் நீதிக்கான செயல்களை , செய்வதற்கும் பேசுவதற்கும் நாம் ஆயத்தமாகுவோம். நாம் கிறிஸ்தவர்கள் நீதியின் விதையை விதைக்க வேண்டும், கர்த்தர் நீதியை நிலைநாட்டும்படியாய் பிறந்தார், ஒருநாளும் அநியாயத்தை விதைக்காதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் இன்றைய கிறிஸ்தவர்கள் பல பேர் வாழ்க்கையில் நீதி இல்லாத வாழ்க்கையும் அநியாயத்தை விதைக்கின்ற கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். அதே போல் திருச்சபையிலும் பார்க்கும்போது பல்வேறு வேளைகளில் நீதியின் பக்கம் மக்கள் மற்றும் ஊழியர்களாகிய நாங்களும் நிற்காமல் அநியாயத்தின் பக்கம் கூட்டமாக சாயந்து விடுகின்றோம். இவைகளை கர்த்தர் பார்வையில் அருவருப்பான காரியமாகி விடுகிறது. இதை கர்த்தர் நமக்கு எச்சரிப்பு விடுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைய நாளில் தீர்மானம் எடுப்போம்.
7. அருளுரை குறிப்புகள்
1. நீதிக்கான ஆயத்தமாகுதல்.
2. திருவசனத்திற்கான ஆயத்தமாகுதல்.
3. விழிப்புடன் இருப்பதற்கான ஆயத்தமாகுதல்.
Written by
Mr. Mansingh Klindan
Gurukul Bible College
0 Comments