ஊரெல்லாம் கண்மூடி தூங்குகின்ற
நடு இரவில் வானகத்தின் தேவதூதன் காபிரியேல் இறங்கி வந்தார்
தேவதூதன் வந்தான் தேவதூதன் வந்தான்
நல்ல செய்தி சொல்ல
ஊரெல்லாம் கண்மூடி தூங்குகின்ற இரவில்
உன்னதத்தின் செய்தி சொல்ல தூதன் வந்தான்
1.வானில் ஜோதி தோன்ற காண மேய்ப்பர் கலங்க
வெண்தூதன் காபிரியேல்
அங்கு வந்தான் - 2
வீணான கலக்கம் ஏதேனும் வேண்டாம்
விண்செய்தி சொல்ல நான் வந்தேனய்யா - 2
2. மாதேவன் இயேசு தாவீதின் ஊரில்
மரியாளின் மகவாக பிறந்தாரே - 2
கந்தைகள் அணிந்து புல்லனை மீத காண்பீரே என தூதன் மறைந்தானே - 2
3. சிந்தை மிக மகிழ்ந்து மந்தை மேய்ப்பர் வந்து
விந்தையாம் பாலனை பணிந்தாரே -2
பார் மீட்க வந்த பாலனை நாமும்
பண்பாடி கொண்டாடி பணிந்திடுவோம் -
எழுதியவர்
கடையனோடை பாக்கியநாதன்
0 Comments