Ad Code

களிகூறு : ஆண்டவர் சமீபம் • CSI Diocese of Tirunelveli 24.12.2023


1) ஞாயிறு குறிப்புகள்:-
ஞாயிறு: கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு
தேதி: 24/12/2023
வண்ணம்: ஊதா
திருமறைப்பாடம்.
 பழைய ஏற்பாடு : சகரியா 2:6−13
புதிய ஏற்பாடு: 1தெசலோனிக்கேயர் 5 : 12−24
 நற்செய்தி பகுதி : யோவான் 16:16−24
சங்கீதம் 50 : 1−1

2) திருவசனம் & தலைப்பு:-
களிகூறு : ஆண்டவர் சமீபம்
 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
சகரியா 2:10 (பவர் திருப்புதல்)
 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்" என்கிறார் ஆண்டவர்.[திருவிவிலியம்)

3) ஆசியர் & அவையோர்":
இந்த நூலை எழுதியவர் சகரியா தீர்க்கதரிசி. இவர் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவாக்கு கூறினார். 

4) எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
இந்த நூல் கி.மு 557− 525 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. சகரியாவின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. சகரியா தீர்க்கதரிசி யூதர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு அவர்களில் பாவிகளை எச்சரிக்கும்போது, கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிறவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு தேவனுடைய கிருபையும் இரக்கமும் தாராளமாய்க் கிடைக்கும் என்று ஆறுதலான வார்த்தைகளையும் சொல்லுகிறார். மேசியாவின் வருகையைப்பற்றியும், இந்தப் பூமியிலே மேசியாவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவது பற்றியும் சகரியா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். 

5) திருவசன விளக்கவுரை :

இந்த திருவசனத்தில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை திடப்படுத்தி , வாக்குரைத்து,மகிழ்ந்திருங்கள் என்று கூறுவதை காணலாம். இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனில் சிறையிருந்தார்கள்.அப்பொழுது கர்த்தர் உங்களை நான் விடுவிக்கிறேன், உங்கள் சத்துருக்கள் கொள்ளையாவார்கள்.நான் உங்கள் நடுவில் வாசம் பண்ணுவேன்.நீங்கள் கெம்பீரித்து மகிழ்ந்திருங்கள் என்று திடப்படுத்தினார்.நான் உங்களிடத்தில் வருவேன் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குரைத்தார் .கடவுள் நம்மில் வந்தால் எப்பொழுதும் நமக்கு மகிழ்ச்சி,சந்தோஷம் உண்டாகும். இன்றும் பல சோதனைகள், கஷ்டத்தோடு, இருக்கிற மக்களை பார்த்து கடவுள் ஒரு நம்பிக்கை வார்த்தை மகிழ்வின் வார்த்தையாக ,நான் உன்னை விடுவித்து,உன்னோடு இருப்பேன் நீ மகிழ்ந்திரு என்று நம்மை திடப்படுத்துக்கிறார்.கடவுளின் வருகையை மகிழ்வுடன் எதிர்நோக்குவோம்.

6. இறையியல் & வாழ்வியல்:
மகிழ்ச்சி அடைய வேண்டுமென்று எல்லாரும் விரும்புகிறோம். ஆனால் உலக மகிழ்ச்சி நிரந்தரமற்றது என்பதை உணர வேண்டும்.கடவுள் தருகிற மகிழ்ச்சி மட்டுமே நிரந்தரமானது.கடவுள் நம்மை பாவத்திலிருந்து விடுவித்துயிருக்கிறார் இனி பாவத்துக்கு அடிமையாகமல், எல்லாரிடமும் அன்பாய் ,எல்லாருக்கும் நன்மை செய்து ,உபத்திரவம் வரும் போது சோர்ந்துப்போகாமல் நிலைத்திருந்து, அவர் வருகைக்கு ஆயத்தமாயிருந்தால் உண்மையான நிரந்தரமான மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியம்.

7. அருளுரை குறிப்புகள் :
1.கடவுள் நம்மை விடுவித்ததினிமித்தம் மகிழ்ந்திரு.
2.கடவுளின் ஜனங்களுக்கு நன்மை செய்து மகிழ்ந்திரு.
3.உபத்திரவத்தில் கடவுளோடு மகிழ்ந்திரு.

Post a Comment

0 Comments