ஆர்ப்பரித்து ஓடுது ஆறு குளமெல்லாம்
மாரிக்கால மழையினும் கன உறையாய்
மாபெரும் வெள்ளமாய் நெல்லை மண்ணிலே
வருட முடிவிலே நூறாண்டில்லா வருடமாய்
வழிநெடுக எங்கும் காட்டாறாய் ஓடுது
சீகரம் விடாமலடிக்க தாமிரபரணி நதியோ
சீண்டி பாரென்று மாசவால் விடுக்குது
தூவல் கண்டு துவளாமல் நற்பணிகள்
தூறல் தூறலாய் எங்கிலும் நடக்குது
துடிப்புடன் இயங்கும் மனிதநேயம் இங்கிருக்க
துளித்துளியாய் பெய்யும் மழைக்கண்டு அஞ்சுவோமோ
திவலைக் கண்டு திண்டாடும் சென்னையா
திருநெல்வேலி மண்ணென்ற பெருமை நெஞ்சில்
வானம் பார்த்து செழித்த பூமியல்லவாயிது
வாழ்வளிக்கும் இறையை போற்றி வேண்டுவோமே
குறிப்பு: மழை – வேறு வார்த்தைகள்
துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம், உறை, ஆலி & வானம்.
கவிஞர். மேயேகோ
meyegoofficial@gmail.com
0 Comments