தலைப்பு:
நிறைவுரை: நான் நானே • Preface: I am who I am
எழுதியவர்: திரு. யே. கோல்டன் ரதிஸ்
தியானம்:
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். தவக்காலம் என்னும் லெந்து காலம் இந்த ஆண்டும் வந்து சென்றுவிட்டது. சிறப்பாக இந்த 2024 ஆம் ஆண்டில், சி.எஸ்.ஐ. தூய மேரி ஆலயம், இராமையன்பட்டி வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பாக "இயேசு யார்? நற்செய்தி நூல்களில் நாற்பது தலைப்புகள் (Who is Jesus? Forty Titles in the Gospels)" என்ற தலையங்கத்தின் கீழ் தியானித்தோம்.
இத்தியானத்தின் நிறைவாக, இந்த கிறிஸ்து உயிர்ப்பின் பெருவிழா நாளில், "நான் நானே" என்பதற்கு சொந்தக்காரர் இயேசு ஒருவரே என்று தியானித்து நிறைவு செய்வது மிக்க ஏற்புடையதாகும்.
பழைய ஏற்பாட்டில் "நான் நானே" கர்த்தராகிய தேவன் தம்மை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தியதை குறித்து வாசிக்கிறோம். கர்த்தர் வேதாகமத்தில் “நானே” என அதிகாரத்தோடு சொல்லுவதை நாம் அறிவோம்.ஏசாயா 43:11 சொல்லுகிறது: "நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை."
புதிய ஏற்பாட்டில், இயேசு சொன்னார் "நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்" (யோவான் 8-24). "உன்னுடனே பேசுகிற நானே அவர்" (யோவான் 4 : 26) என்று இயேசு சமாரியா பெண்ணிடம் தெளிவுபடுத்துகிறார். தம் சீடர்களிடம், "நான் தான், பயப்படாதிருங்கள்" (யோவான் 6.20) என்றார்.
நான் நானே என்பது இயேசுவின்
1. தனித்துவத்தை குறிக்கிறது.
2. சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
3. இறையாண்மையை உணர்த்துகிறது.
நானே என்ற வார்த்தையை சொல்ல தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தரன்றி எந்த மனுசருக்கும் தகுதியில்லை. இந்த சிந்தை நம்மில் இருக்குமே என்றால் நான் என்ற சுயம் நம்மில் இருக்காது. ஆகவே, எல்லா இயேசுவின் வல்லமையில் களிகூர நாம் நம்மை நாமே தாழ்த்தி அர்ப்பணிப்போம். இறையாசி
நாமோடிருப்பதாக...
0 Comments