Ad Code

என் தேவன் • My God • Jesus Christ

SMC Lenten Meditation 2024
தியானம்: 40 / 40 - இரட்சணியக் கொம்பு
எழுதியவர்: திரு. ஜெ. பிளஸ்ஸிங் நியூமேன் 
தலைப்பு : என் தேவன்

வசன இருப்பிடம் : யோவான் 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! *என் தேவனே!* என்றான்.

தலைப்பின் அர்த்தம்:
தேவன் என்றால் கடவுள் (God)

விளக்கவுரை :
நாம் அனைவரும் அறிந்த படி, உயிர்தெழுந்த இயேசு சீடர்களுக்கு தரிசனமான போது, தோமா அங்கு இல்லை. சீடர்கள் உயிர்தெழுந்த இயேசு எங்களுக்கு தரிசனமானார் என்று சொல்லியும் தோமா நம்பவில்லை. 8 நாளுக்கு பிறகு கதவு பூட்டி இருக்கும்போது, உயிர்தெழுந்த இயேசு தோமாவுக்கு தரிசனம் கொடுக்கிறார்.

 நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு பல நாமங்கள் உண்டு, இந்த இடத்தில் தோமா இயேசுவை என் தேவனே என்று அழைக்கிறார். அதாவது குமாரனை தேவனே என்று அழைக்க காரணம் என்ன?

தோமா ஒரு யூதன் (jew), யூதர்கள் தேவன் ஒருவரே என்பதில் உறுதியாக உள்ளவர்கள். தங்கள் இரட்சிபிற்காக மேசியா ஒருவர் வருவார் என்று காத்திருத்தவர்கள். விசுவாசியாமல் இருந்த தோமா, உயிர்தெழுந்த இயேசுவை கண்டவுடன், விசுவாசத்தின் உச்சிக்கு சென்று உயிர்தெழுந்த இயேசுவில் தேவனை கண்டு *என் தேவனே* என்கிறான்.

யோவான் 1:1 தெளிவாக சொல்லுகிறது:
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை தேவனாயிருந்தது* என்று.

யோவான் 1:14 சொல்லுகிறது 
அந்த வார்த்தை *மாம்சமாகி* என்று.

யூதர்கள் இயேசுவை நோக்கி கேள்வி கேட்ட போது (யோவான் 8:58 யூதர்களை நோக்கி)
அதற்கு இயேசு: *ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்* என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இப்படியிருக்க யூத முறைமையில் வந்த தோமா இயேசுவினிடத்தில் தேவனை காண்கிறான்.

முடிவுரை :
தோமா முதலாவது தேவனை காணாமல் விசுவாசிக்கவில்லை. உயிர்தெழுந்த இயேசுவை 8 நாளைக்கு பிறகு கண்டவுடன் *என் தேவன்* என்று அறிக்கையிட்டான். பவுல் ரோமருக்கு எழுதும் போதோ (ரோமர் 10:9),
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை *மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று* உன் இருதயத்திலே விசுவாசித்தால் *இரட்சிக்கப்படுவாய்* என்று சொல்லுகிறார்.

அதே பவுல், கொரிந்தியர் 3:23 ல் நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள், கிறிஸ்து தேவனுடையவர் என்று சொல்கிறார். நாமும் தோமாவை போல், உயிர்தெழுந்த இயேசுவை *என் தேவன்* என்று அறிக்கை செய்து பவுல் சொல்வது போல் இரட்சிக்க படுவோம்.

Post a Comment

0 Comments