1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 1-ம் ஞாயிறு (திரித்துவ 1)
தேதி: 02/06/2024
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
*பரத்திலிருந்து வரும் ஞானம்*
யாக்கோபு 3:17
(பவர் திருப்புதல்) பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
(திருவிவிலியம்) விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது.
3. ஆசிரியர் & அவையோர்
எருசலேம் சபை மூப்பரும் இயேசுவின் சகோதரருமான யாக்கோபு இந் நிருபத்தை எழுதினார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கி. பி. 49-ல் எருசலேம் ஆலோசனை கூடுகை நடப்பதற்கு முன்பு எழுதப்பட்டது.
யாக்கோபின் நிருபம் பாலஸ்தீனுக்கு வெளியே புற ஜாதிகளின் நடுவில் சிதறியிருக்கிற 12 கோத்திரங்களுக்கும் ( யூத கிறிஸ்தவர்கள் ) எழுதப்பட்டது (1:1).
5.திருவசன விளக்கம்
யாக்கோபு இரண்டு வகையான ஞானத்தை குறித்து எழுதுகிறார். ஒன்று உலக ஞானம் (v.14-16) மற்றொன்று கடவுளிடத்திலிருந்து வரும் ஞானம். நல்லொழுக்கங்கள் (Virtues- v. 3:17)பரத்திலிருந்து வரும் ஞானத்திற்கு அடையாளமாக இருப்பதால் ஆண்டவர் கொடுக்கிற ஞானம் உலக ஞானத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கடவுள் கொடுக்கிற ஞானத்தில் இருக்கிற தனிச்சிறப்பை யாக்கோபு இங்கு பட்டியலிடுகிறார். தேவன் கொடுக்கிற ஞானத்தின் தலையாய பண்பு *சுத்தம்*, *தூய்மை*(*Purity*). ( பழைய ஏற்பாட்டின் முறைமை படி யூதர்கள் மற்றும் யூத கிறிஸ்தவர்கள் தங்களை கலாச்சார ரீதியில் சுத்திகரிப்பதையும் இது குறிக்கிறது).
இந்த *சுத்தம்*( In the New Testament it signifies *Moral*Purity*) என்னென்ன பண்புகளை கொண்டிருக்கிறது என்பதை ஆசிரியர் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.
**a*) *சமாதானம்* (Opposite of Unrest - அமைதியின்மை).
*b* ) *சாந்தம் இணக்கம்* (What is right or Fitting)
*C* ) *இரக்கம், நற்கனி* (In NT the word mercy used it for *Christ* )
*d* ) *பட்சபாதமில்லைமை* ( Impartial -நடுநிலைத் தவறாமை- sincere in his
opinions and actions).
*e* ) *மாயமற்ற தன்மை* (sincerity- நேர்மை ).
Written by
Mr. Rebin
Catechist
Kallidaikurichi Pastorate
0 Comments