Ad Code

இயற்கையின் மீது கரிசனை • Concern on the Nature • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு
தேதி: 09/05/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 
இயற்கையின் மீது கரிசனை
     உபாகமம் 20:19
     (பவர் திருப்புதல்) நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிகைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக, அகைளின் கனியை நீ புசிக்கலாமே, ஆகையால் உனக்குக் கொத்தளத்துக்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக, வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். 
     (திருவிவிலியம்) ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே! 

3. ஆசிரியர் & அவையோர்
 இந்தப் புத்தகத்தை எழுதியவர் மோசே. இதற்கான அக புறச் சான்றுகள் அநேகம் இருக்கின்றன.மோசேயின் மரணத்திற்கு பின்னான பகுதிகள் யோசுவா மூலம் எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.
உபா. 1:1-5; 4:44-46; 29:1; 31:9, 31; 24-26. வாக்குத்தத்த நாட்டில் நுழையயிருந்த புதிய இஸ்ரவேல் தலைமுறையினருக்கு மோசே மூலம் எழுதப்பட்டது 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிமு 1406-ல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது. 120 வயது முதிர்ந்த மோசே தனது 40 ஆண்டு கால பாலைவன பயணத் தருவாயில், வாக்குத்தத்த நாட்டை சொந்தமாக்க ஆயத்தமாய் இருக்கும் இரண்டாம் தலைமுறையினரான இஸ்ரவேலரை வழியனுப்பும் செய்தி தொகுப்பே இந்த உபாகம புத்தகம்.

5. திருவசன விளக்கவுரை 
மோசே இஸ்ரவேல் மக்களுக்கு வாழ்வியல் முறைகள் & சமுதாய நெறிகள் குறித்து கற்றுக்கொடுக்கும் போது, இயற்கையின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகின்றார். இந்தப் பகுதியில் ஒரு நாட்டிற்கு யுத்தத்திற்கு செல்லும் போது, கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை பற்றி சொல்லுகின்றார். அந்த நெறிமுறைகளில் ஒன்று தான் யுத்தம் இயற்கையை மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். இது கடவுளின் கட்டளையும் கூட. 

உபாகமம் 20.19 இல், யுத்தத்திற்கு சென்ற நாட்டில் உள்ள மரங்களில் உள்ள கனிகளை பறித்து புசிக்கலாம்; அதில் தவறு இல்லை. ஆனால் அங்குள்ள மரங்களை வெட்டி, கொத்தளம் (முற்றுகை) அமைக்க அதை பயன்படுத்துவது என்பது தவறு. 

As the Commentator Barnes has explained, " The parenthesis may he more literally rendered "for man is a tree of the field," i. e., has his life from the tree of the field, is supported in life by it (compare Deuteronomy 24:6). The Egyptians seem invariably to have cut down the fruit-trees in war."

6. இறையியல் & வாழ்வியல்
யுத்தத்திற்கு சென்ற நாட்டிலேயே இவ்வளவு கவனமுடன் இயற்கையை கையாள ஆண்டவர் கட்டளை கொடுப்பார் என்றால், நம் சொந்த மண்ணில் சுற்றுச் சூழலை எவ்வளவு அதிகமாய் கவனிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். இயற்கையின் மீது கரிசனை கொண்டு சிந்தித்து செயல்படுவோம்.

7. அருளுரை குறிப்புகள்
 இயற்கையின் மீது கரிசனை
1. இயற்கையை வளர்ப்போம்
2. இயற்கையை பேணுவோம்
3. இயற்கையோடு வாழ்வோம்
     

Post a Comment

0 Comments