1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 7-ம் ஞாயிறு (திரித்துவ 6)
தேதி: 07/07/2024
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
நமது திருச்சபை
நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
எபிரேயர் 3:14 +பவர் திருப்புதல்)
தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.
எபிரேயர் 3:14 (திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்
இந்த நிருபத்தை எழுதிய ஆசிரியர் யார் என்பதை யாரென்று உறுதியாக தெரியவில்லை. ரோம பேரசின் கிழக்கு பகுதியில் இருக்கும் மக்கள் இது பவுல் அப்போஸ்தலனால் எழுதப்பட்டட்டது என்று நம்புகிறார்கள். பவுலினுடைய நெருங்கிய நண்பன் பர்னபா எழுதியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மார்ட்டின் லுத்தர் இந் நூலை அப்பெல்லோ எழுதினார் என்று கூறுகிறார். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த எபிரெயர்களுக்கு (யூத கிறிஸ்தவர்களுக்கு ) எழுதப்பட்டது
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கி. பி. 70க்கு முன்பு எழுதப்பட்டது.
யூதர்களாலும், ரோம அரசர்களாலும் சமூக நிலையிலும், சரீர நிலையிலும் உபத்திரவம் அனுபவித்த பாலஸ்தீனத்தில் வாழ்ந்த எபிரெயர்களுக்கு (யூத கிறிஸ்தவர்களுக்கு ) எழுதப்பட்டது.
5. திருவசன விளக்கம்
எபிரேய நிருபத்தின் ஆசிரியர் கட்டுப்பாடு ( *முடிவுபரியந்தம் உறுதியாய்* ) சார்ந்த ஆலோசனையை தனது மக்களுக்கு வழங்குவதை v. 14 சுட்டிகாட்டுகிறது. இந்த ஆலோசனையை இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்திர பயணத்தின் மூலம் ஆசிரியர் தனது மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் (சபையார் ) வனாந்திரத்திலே ஆணடவரை விசுவாசியாமல், கீழபடியாமல் போனதினாலே அவர்கள் கானான் தேசத்திற்குள் போக முடியவில்லை (எபி.3:7-11). அது போல யூத கிறிஸ்தவர்களும் பாடுகள் மற்றும் உபத்திரவத்தின் நிமித்தம் ஆரம்பத்தில் கொண்ட (எபி 2:1-4) விசுவாசத்தை விட்டு பின் வாங்கினால் கிறிஸ்துவின் மூலம் வருகின்ற ஆசீர்வாதமகிய நித்திய ராஜியத்திற்கு அந்நியராக்கப்படுவோம்.
அதனால், ஆசிரியர் நிபந்தனைக்குட்படுத்தப்பட் ட ஆலோசனையாகிய *முடிவு பரியந்தம் நம்பிக்கையை பற்றி கொண்டிருத்தல்* என்கிற பதத்தை பயன்படுத்துகிறார். அந்த நம்பிக்கையின் மூலம் நாம் கிறிஸ்துவுக்குள் திருச்சபையாக *பங்குள்ளவர்களாயிருப்போம்* ( *Partner in Christ = Business terminology which indicates eternal blessings)*
6. வாழ்வியல்
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளம் விசுவாசம் அந்த விசுவாசத்தை முடிவு பரியந்தம் ( *நம்முடைய மரணம் வரை or கிறிஸ்துவின் 2-ம் வருகை வரை* ) பற்றி கொண்டிருக்கும் போது தான் கிறிஸ்துவில் கூட்டாளியாக, திருச்சபையாக இணைக்கப்பட்டிருப்போம்.
7. அருளுரை குறிப்புகள்
0 Comments