ஞாயிறு: திரித்துவதிருநாளுக்குப் பின்வரும் 7ஆம்ஞாயிறு
தேதி: 14/07/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: யோவான் 10
சங்கீதம்: 23
2. திருவசனம் & தலைப்பு
நல்ல மேய்ப்பர் யோவான் 10:11
(பவர் திருப்புதல்) நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
(திருவிவிலியம்) நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
3. ஆசிரியர் & அவையோர்
கிறிஸ்து இயேசுவின் அன்பின் அப்போஸ்தலர் யோவான் நற்செய்தியாளர் தான் இந்நூலில் ஆசிரியர். கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கி.பி. 90 களில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவரது காலத்தில் இருந்த துர்உபதேசங்கள் & வேத புரட்டல்களுக்கு பதில் கொடுக்கும் படியாக இவர் எழுதியதாகக் கருதப்படுகிறது.
5. திருவசன விளக்கவுரை
இயேசு இன்னமும் யூதேயாவில்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர்களிடம் ஆடுகளையும் தொழுவங்களையும் பற்றிச் சொல்கிறார். இவையெல்லாம் அந்த மக்களுக்கு ரொம்பப் பழக்கப்பட்ட விஷயங்கள். ஆனால், நிஜமான ஆடுகளையும் தொழுவங்களையும் பற்றி இயேசு பேசவில்லை; அவற்றை ஒரு உதாரணமாகப் பயன்படுத்துகிறார்.
யேகோவா-ரோஹி: (Jehovah-Rohi means God our Shepherd) "கர்த்தர் எங்கள் மேய்ப்பர்" (சங்கீதம் 23:1). ஆடுகள் மே தாவீது தன் அனுபவத்தில் கர்த்தரை குறித்து எழுதியது எனலாம். புதிய ஏற்பாட்டில், நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார். சிறந்த நல்ல, அழகிய, நம்பிக்கை
யான என்ற பொருளை இந்த “நல்ல” என்ற சொல் குறிப்பிடுகிறது.
நல்ல மேய்ப்பன் இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் தூங்கக்கூடாதெனவும், சிதறக்கூடாது அல்லது ஆடுகள் வழிதவறிப் போகக் கூடாது எனவும், நமது சொந்த லாபத்துக்காக நமது சொந்த வழியில் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கிறார். தேவனின் மேய்ப்பர்கள் பெலப்படுத்தவும், குணமாக்கவும், உடைந்ததைக் கட்டவும், வெளியே துரத்தப்பட்டவற்றை திரும்பக் கொண்டு வரவும், இழக்கப்பட்டதை தேடவும் வேண்டும்.
6. இறையியல் & வாழ்வியல்
வேதாகமத்தில் மேய்ப்பன்-ஆடுகள் என்ற உருவகம் அநேகமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் 10 ஆம் அதிகாரம் என்றாலே "மேய்ப்பனின் அதிகாரம்" (Chapter of Shepherd) என்றே அழைக்கலாம். யோவான் 10:11 இல் நல்ல மேய்ப்பன் கூறியது நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தனது மந்தையை பாதுகாத்து பராமரிப்பது மேய்ப்பனின் திறமையில் உள்ளது.
7. அருளுரை குறிப்புகள்
நல்ல மேய்ப்பர்
1. நல்ல உறவு கொண்ட மேய்ப்பர்
2. நல்ல வழிகாட்டும் மேய்ப்பர்
3. நல்வாழ்வு அளிக்கும் மேய்ப்பர்
0 Comments