Ad Code

சிறுவர்கள்: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்கள் • Children's Sunday 2024 • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்:
ஞாயிறு: பெந்தேகொஸ்தே திருநாளுக்குப் பின்வரும் 9-ம் ஞாயிறு (திரித்துவம் 8) "பாலர் ஞாயிறு"
தேதி: 21.07.2024
திருமறை பாடங்கள்: ப.ஏ யாத் 2:1-10
பு. ஏ லூக் 18: 15 - 17
நிருபம்: 3 யோவான் 1: 1-15
சங்கீதம்: 47

 2. தலைப்பு: "சிறுவர்கள் கிறிஸ்துவுக்குப் பிரியமானவர்கள் "
3 யோவான் 1:4
 (பவர் திருப்புதல்) என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
(திருவிவிலியம்) என் பிள்ளைகள் உண்மைக்கேற்ப வாழ்ந்து வருகிறார்களென கேள்விப்படுவதை விட மேலான பெருமகிழ்ச்சி எனக்கு இல்லை.

 *3* . *ஆசிரியர் & அவையோர்* :

யோவான் நற்செய்தி மற்றும் புதிய ஏற்பாட்டின் நான்கு புத்தகங்களை - மூன்று நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் யோவான் என்று கருதப்படுகிறது.
யோவானின் நற்செய்தி கிரேக்க-ரோமன் உலகம் முழுவதும் வாழும் யூதர்கள் மற்றும் புறஜாதிகள் இருவரையும் இலக்காகக் கொண்டது.

 *4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை* :
யோவான் புத்தகத்தின் இறுதி வடிவத்தை கி.பி 90-110 இல் அடைந்தார், இருப்பினும் இது கி.பி 70 க்கு முந்தைய மற்றும் அதற்கு முந்தைய தோற்றத்தின் அடையாளங்களைக் கொண்டுள்ளது. மற்ற மூன்று நற்செய்திகளைப் போலவே, இது அநாமதேயமானது.


ஜான் அதன் இறுதி வடிவத்தை கி.பி 90-110 இல் அடைந்தார், இருப்பினும் இது கி.பி 70 க்கு முந்தைய மற்றும் அதற்கு முந்தைய தோற்றத்தின் அடையாளங்களைக் கொண்டுள்ளது. மற்ற மூன்று நற்செய்திகளைப் போலவே, இது அநாமதேயமானது, இருப்பினும் இது பெயரிடப்படாத "இயேசு நேசித்த சீடரை" அதன் பாரம்பரியங்களின் ஆதாரமாக அடையாளப்படுத்துகிறது.

ஜான் அதன் இறுதி வடிவத்தை கி.பி 90-110 இல் அடைந்தார், இருப்பினும் இது கி.பி 70 க்கு முந்தைய மற்றும் அதற்கு முந்தைய தோற்றத்தின் அடையாளங்களைக் கொண்டுள்ளது. மற்ற மூன்று நற்செய்திகளைப் போலவே, இது அநாமதேயமானது, இருப்பினும் இது பெயரிடப்படாத "இயேசு நேசித்த சீடரை" அதன் பாரம்பரியங்களின் ஆதாரமாக அடையாளப்படுத்துகிறது.



 *5. திருவசன விளக்கம்:*

சிறுவர்கள், நமது இல்லத்தை அழகாக்குபவர்கள். எவ்வளவு செல்வங்கள் நமக்கு இருந்தாலும், பிள்ளைச் செல்வம் தான் முக்கியமானது. 
வேதம் சொல்லுகிறது: "பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் " . சங் 127:4.

இயேசுவும் சிறு பிள்ளைகளை நேசித்தார் (மாற்கு 10:14, மத் 19:14, லூக் 18:16 ). 

அப்படிப்பட்ட நம்முடைய பிள்ளைகளை ஆண்டவர் நேசிப்பது போல, நாமும் நேசிக்கிறோம். ஆகவே, ஆண்டவரின் பிள்ளைகளாக என்றும் அவர்கள் இருப்பதற்கு ஒரு சில சிந்தனைகளை வேதம் நமக்குக் கற்றுத்தருகிறது.

 (a) ஞானமுள்ள ப் பிள்ளைகள் -பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகள்:
நீதிமொழிகள் 10:1 -ல்
சாலமோன் ராஜா பிள்ளைகளைப் பற்றிக் கூறுகிறார், "ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்";
நீதிமொழிகள் 10:1. நம்முடையப் பிள்ளைகள் ஞானத்தோடு இருப்பது அவசியம். அறிவுள்ளப் பிள்ளைகளின் எதிர்காலம் என்றும் அருமையே! ஆகவே, நம் பிள்ளைகளை ஞானத்தோடு வளர்க்க வேண்டும் என்று வேதம் கற்றுக் கொடுக்கிறது. " கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதிமொழிகள் 1:7 (a)). கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடக்கக் கற்றுக் கொடுப்பது நம் கடமை. ஏனென்றால், ஞானமாய் நடக்க அது தான் முக்கியம் ; ஞானமுள்ளப் பிள்ளைகள் தான் பெற்றோரை சந்தோஷப்படுத்த முடியும்.

 (b) தேவ சித்தத்தை செய்யும் பிள்ளைகள் :
பிள்ளைகளை ஆண்டவர் நமக்குத் தந்து இருக்கிறார். ஏன், இப்பூமியில் அவர்கள் பரிசுத்த சந்ததியாக நம்மூலம் வருகிறார்கள். அவர்கள் கடைசி வரை பரிசுத்தமாய் வாழ வேண்டும், வேதம் கூறுகிறது: மத் 7:21 -ல் "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் " .
பிதாவின் சித்தம் தான் என்ன?
1 தெசலோனிக்கேயர் 4:3 கூறுகிறது,

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது". நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமாம்; இதுவே, நம்மைப் படைத்தவரின் சித்தம் , இதிலே ஒவ்வொரு நாளும் அவர்களை நடத்துங்கள். மோசேயைப் போல, ஒரு சாமுவேலைப் போல அவர்களும் தேவ சித்தத்தைச் செய்யட்டும். உலக வாழ்கையின் மாயையைப் பாராமல் மேலான இராஜ்யத்தைப் பிள்ளைகள் ஆண்டு கொள்ள சூழ்நிலைகளை நாம் உருவாக்கிக் கொடுப்போம்.

(C) சத்தியத்திலே நடக்கிறப் பிள்ளைகள்:
துர் உபதேசங்கள் சபைகளில் வலம் வந்த காலத்தில், அப்போஸ்தலன் யோவான் இதை எழுதுகிறார். 3 யோவான 1:4-ல் "என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக சந்தோஷம் எனக்கு இல்லை" என்கிறார்.

அநேக காரியங்களை அவர் கேள்விப்பட்டிருப்பார், ஆனால், சத்தியத்திலே நடக்கிறார்கள் என்றுத் தன் பிள்ளைகளை குறித்து மெச்சிக் கொள்கிறார். இன்று என் அன்புப் பெற்றோரே! நமது பிள்ளைகளுக்கு அநேக காரியங்களை கற்றுக்கொடுக்கிறோம்; கல்வியிலே, பிற மனிதர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று, மற்றும் அவர்களது திறமைகளை வெளிக்கொணரச் செய்வதிலே அதிகமாய் பிரயாசப்பட்டு கற்றுக்கொடுக்கிறப் பெற்றோராகிய நாம் சத்தியத்திலே நம்முடையப் பிள்ளைகளை நடத்த முற்ப்படுவோம். ஆண்டவரும் அவர்கள் பேரில் மகிழுவார்.

 6. இறையியல் & வாழ்வியல்:
ஆண்டவர் சிறு பிள்ளைகளை அதிகம் நேசிக்கிறார். ஆகவே, அவர் விரும்பும் நற்ப்பண்புள்ள பிள்ளைகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமையே. சாமுவேலை ஆண்டவர் அழைத்தார்; அழைத்த ஆண்டவரின் சத்தத்தை அவன் அறியவில்லை, கூப்பிடுகிறது ஆண்டவர் தான் என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தது ஏலியே!
(1 சாமு 3:1-10). சிறந்தப் பிள்ளைகளாக நம்முடைய குழந்தைகளை உருவாக்குவது நாமே என்று கருத்திற் கொண்டு செயல்படுவோம் எனதருமைப் பெற்றோரே !. 

 7. அருளுரைக் குறிப்புகள் :
"சிறுவர்கள் கிறிஸ்துவுக்குப் பிரியமானவர்கள்"
(a) ஞானமுள்ளப் பிள்ளைகள் - பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகள்.
(b) தேவ சித்தத்தைச் செய்யும் பிள்ளைகள்
(C) சத்தியத்திலே நடக்கிறப் பிள்ளைகள்

 எழுதியவர்:
இ. கோயில் பிள்ளை. M.A.,
இறையியல் இரண்டாம் ஆண்டு,
கன்கார்டியா இறையியல் கல்லூரி,
நாகர்கோவில்.

Post a Comment

0 Comments