Ad Code

பாடல் வேளையை நடத்துவது எப்படி? Part 1 • ஆயத்தம்

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். பாடல்கள் கிறிஸ்தவ ஆராதனைகளில் முக்கியமானவை. திருமறையில் அநேக பாடல்கள் இருப்பது இதற்கு ஆதாரம். இந்தப் பதிவில், கடவுள் நாம மகிமைக்காகவும், சபை மக்களுக்கு நண்மைபயக்கும் வண்ணமாகவும் பாடல் வேளையை நடத்துவது எப்படி? என்று கற்றுக் கொள்ள இருக்கிறோம்.


1. ஆயத்தம் (Preparation)

1.1 ஜெப ஆயத்தம்

🙏 வீட்டில் பாடல்களை தெரிவு செய்யும் முன், அல்லது பயிற்சியைத் தொடங்கும் முன் கட்டாயம் முழங்காலில் நின்று ஜெபியுங்கள். 

🙏 இந்த ஜெபம் தான் நீங்கள் பாடும் போது, மக்களோடு கடவுள் செயல்பட வழிவகுக்கும். 

🙏 "நன்றாக பாட வேண்டும் என்று ஜெபிப்பது தவறல்ல, ஆனால் நான் பாடும் போது மக்களின் இருதயத்தில் கிரியை செய்ய வேண்டும் என்று ஜெபிப்பது முக்கியம்."


1.2 பாடல் தெரிவு செய்தல்

🎶 மக்களுக்கு புரியும் வண்ணம், சபை ஒழுங்குக்கு ஏற்ப பாடல்கள் தெரிவு அவசியம். பாடும் முதல் பாடல் மக்களால் மனப்பாடமாக பாடத்தக்க அறிமுகமான பாடலாக இருப்பது நல்லது. பிறகு புதிய பாடல்கள் பாடலாம். 

🎶 உங்களுக்கு என ஒரு பாடல் புத்தகம் / டைரி / மொபைல் நோட்ஸ் வைத்துக் கொள்வது நல்லது. 

🎶 மக்களிடம் பாடல்கள் வரிகள், புத்தகம் இருப்பது நல்லது. அல்லது PPT பயன்படுத்துவது நல்லது.

🎶 செய்தியின் கருப்பொருள் (Tittle) இருக்கும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் பாடல்கள் தெரிவு செய்யப்படலாம்.

🎶 சில தினங்களுக்கு முன்பாகவே ஆயததப்பட வேண்டும்.

1.3 பயிற்சி 

💥 முதல் முறை அந்த பாடல்களை முன் நின்று பாட போகிறோம் என்றால் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

💥 பாடல் பயிற்சியின் போது ரெகார்ட் (Record) செய்து நாமே கேட்டு சரிசெய்து கொள்ளலாம்.

💥 இசை கருவிகள் பயன்படுத்தினால், அதையும் வைத்து பயிற்சி செய்வது நல்லது.


1.4 பாடல் விளக்க ஆயத்தம்

✒️ பாடல்களுக்கு இடையில் பேசுவதற்கு குறிப்புகள் எடுத்து வைக்க வேண்டும்.

✒️ வசனங்கள், கதைகள், எடுத்துக்காட்டுகள், கேள்விகள் மற்றும் உரையாடல்கள் (Conversation) ஆக்கியவை ஆயத்தம் செய்யப்பட வேண்டும். டைரியில் இவற்றை எழுதி வைப்பது நல்லது.


1.5 மேடை ஆயத்தம்

✨ பாடுவதற்கு முன் பயன்படுத்த போகும் மைக், இசைக்கருவி, & etc போன்றவற்றை ஆயத்தப்படுத்த வேண்டும். அவற்றை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

✨ நல்ல ஆடைகள் அணிந்து முன்நிற்பது நல்லது. 

✨ தனியாக பாடினால் நடுவில் நிற்க வேண்டும்.

✨ குழுவாக பாடினால் நேர்க் கோட்டு வரிசையில் நிற்க வேண்டும்.

✨ பாடும் அனைவரின் கையிலும் தனித்தனி பாடல் தாள், புத்தகம், மொபைல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.


Part 2 (How to Perform) will be continued..... (Worship Series)


Written by

Meyego

Post a Comment

0 Comments