Ad Code

வழி • Way • Titles of Jesus Christ

SMC Lenten Meditation 2024
தியானம்: 21 / 40 - வழி
எழுதியவர்: செல்வன். பா. டேவிட் ஆன்ரோ

தலைப்பு : வழி • WAY 
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 

தலைப்பின் அர்த்தம்: வழி என்பது செல்லும் பாதையை குறிக்கின்றது 

 வசன இருப்பிடங்கள்:
யோவான் 14:6

 விளக்கவுரை
 இயேசு கிறிஸ்து நானே வழி என்று சொன்னது அவர் நம்மை வழி நடத்துபவராக மட்டும் இல்லாமல் அவரே வாழ்ந்து காட்டினார். அவரே பாவத்திலிருந்த நம்மையும் ஆண்டவரையும் இணைக்கும் வழியானார்.

1. விடுதலையின் வழி
நாம் அநேக நேரங்களில் பாவத்தை சுயத்தால் வெல்ல முயற்சி செய்கிறோம். ஆனால், யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். அவரையன்றி பாவத்திலிருந்து நமக்கு விடுதலை இல்லை என்பதை நாம் உணர்ந்து பாவத்தை அறிக்கை செய்தால் நிச்சயமாக நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்வார்.

2. வாழும் வழி 
இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து நமக்கு வழியை காட்டினார்.
இயேசு கிறிஸ்து மனிதராகவே வாழ்ந்து உலக பாவங்கள் எல்லாவற்றையும் மேற்கொண்டு பிதாவின் சித்தத்தை‌ பூரணமாக நிறைவேற்றினார்.அவர் நம் முடைய பாவங்களை நமக்கு மன்னித்தது போல நாம் பிறருக்கு மன்னிக்கின்றோமா? மத்தேயு 22:39 இல் இயேசு நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க சொன்னார். மத்தேயு 7:12 இல் மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்றார். இந்த வழியை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி நம்மில் இயேசுவை பிரதிபலிப்போம். 


3. நித்திய ஜீவனுக்கான வழி 
இந்த உலகத்தில் நாம் செல்வம் மற்றும் வெற்றியை அடைவதற்கான எத்தனையோ வழிகளை தேடி அதற்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நிலையற்ற இவற்றை விட நித்தியமான வாழ்வின் வழியாகிய இயேசுவின் வழியில் நம்மை அர்ப்பணித்து நடக்கிறோமா ? மத்தேயு 7:14 இல் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். 
அந்த இடுக்கமான வழியில் இயேசுவை போல் நாம் உலகத்தை மேற்கொண்டு விசுவாசத்தோடு அவரின் வழியை பின்பற்றினால் நிச்சயமாக பரலோகத்தை சுதந்தரித்து கொள்ள முடியும்.


முடிவுரை
இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாம் இஸ்ரவேல் ஜனங்களை போல வழி விலகி கானான் தேசத்தை சேராமல் வழியிலே அழிந்து போகாமல் எல்லாவற்றையும் அவரிடம் அர்ப்பணித்து விசுவாசத்தோடு சிலுவையான அவருடைய சித்தத்தை சுமந்து நமக்கு வாக்கு பண்ணப்பட்ட பரலோக ராஜ்யத்தையும் பிதாவையும் காண இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த வழியில் அவரை பின் பற்றி நடப்போம்.

Post a Comment

0 Comments