SMC Lenten Meditation 2024
தியானம்: 20 / 40 - ஜீவ அப்பம்
எழுதியவர்: செல்வன். கிளிண்டன் டென்னிஸ், MCA
தலைப்பு : ஜீவ அப்பம் • Living Bread
யோவான் 6:35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
வசன இருப்பிடங்கள்:
யோவான் 6.33 - 35
தலைப்பின் அர்த்தம்:
நானே ஜீவ அப்பம் என்பதின் அர்த்தம் என்னவென்றால், எல்லாரும் ஜீவனைப் பெற, என் ஜீவனைக் கொடுக்க வந்த மெய்யான அப்பம் என்று இயேசு தன்னைக் குறித்து சொன்னதாகும்.
விளக்கவுரை:
தன் ஜீவனை கொடுக்கும் அப்பம்:
யோவான் 6:33: வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். இயேசு தன் ஜீவனைக் கொடுத்து சரீரத்தைப் பிட்டு நமக்குத் தந்த படியால் ஜீவஅப்பம். மரித்துக் கிடக்கிற ஆத்துமாவை உயிர்ப்பித்து ஆத்து மாவிலே ஜீவனைக்கொண்டு வருகிறபடியால் இயேசு ஜீவஅப்பம்.
பிறருக்கு ஜீவனை கொடுக்கும் அப்பம்
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் காணப்படும்படி நாம் நித்திய நித்திய காலமாய் மகிழ்ந்திருக்கு ம்படி நித்தியஜீவனை நமக்குள் கொண்டு வருகிறபடியால் இயேசு ஜீவஅப்பம். யோவான் சுவிசேஷத்தின் மொத்தம் நான்கு இடங்களில் கிறிஸ்து “அப்பம்” என்று குறிப்பிடுகிறார் (6 : 35, 41, 48, 51).
முடிவுரை:
இயேசு தன்னிடம் வரும் எவரையும் புறக்கணிப்பதில்லை. அவர் முதன்மையாக முழு உலகத்திற்கும் இறைவனுடைய உணவைக் கொடுப்பவர்தான், இவ்வுலகத்திற்குரிய உணவைக்கொடுப்பதற்காக அவர் முதன்மையாக வரவில்லை. "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" யோவான் 6:37. ஆகவே அவரைப் பற்றி கொண்டு, நித்திய வாழ்வை பெறுவோம். ஆமென்.
0 Comments