Ad Code

ஜீவ தண்ணீர் • Living Water • SMC Lenten Meditation

SMC Lenten Meditation 2024
தியானம்: 19 / 40 - ஜீவ தண்ணீர் 
எழுதியவர்: திரு. அலெக்ஸ் கிறிஸ்டோபர்
தலைப்பு : ஜீவத்தண்ணீர் Living Water

வசன இருப்பிடங்கள் : 
யோவான் 4:10.
 ஏரேமியா 2:13 , வெளி 22:17 , வெளி 21:6.

தலைப்பின் பொருள் : 
பொதுவான அர்த்தம் "வற்றாத நீரூற்று/தண்ணீர் என கூறலாம்", இந்த வேதப்பகுதில் "ஜீவத்தண்ணீர்" என்ற வார்த்தைக்கு பொருள் " இரட்சிப்பையையும் நித்திய ஜீவனையும் (வாழ்வை)" குறிக்கிறது என கூறலாம்.இயேசு ஆவிக்குரிய தாகம் தீர்க்கின்றவராகவும், நம்மை ஜீவ ஊற்றாய் மாற்றுகிற தேவனாகவும் வெளிப்பட்டார் .

விளக்கவுரை :-
யோவான் 4: 
இப்பகுதியில் இயேசு சமாரிய ஸ்திரியிடம் தம்மை தாகம் கொண்ட மனிதனாக (வசன 8) அறிமுகப்படுத்தி கொண்டு,
பின்பு தீர்க்கதரிசி (வசன 19) ,மேசியா (வசன 26),கிறிஸ்து என்னும் மெய்யான உலக இரட்சகர் என வெளிப்படுத்துகிறார்.(வசன 42).

இரட்சிப்பு என்பதற்கு மீட்க்கப்படுதல் அல்லது விடுவிக்கப்படுதல் என கூறலாம்.அதை தேவன் ஈவாய் அளிக்கிறார். (வசன 10).
இயேசு அந்த சமாரியா பெண்ணை இரட்சிக்க விரும்பினார், அவளிடம் இயேசு ஆவிக்குரிய தாகத்தை பற்றி பேசி அவள் வாஞ்சை அறிந்து (வசன 15) ,அவள் பாவத்தில் அடிமை கொண்டு இருப்பதை உணர்த்துகிறார் (வசன 16,17). தேவனை எங்கு,எப்படி தொழுது கொள்ள வேண்டும் என ஸ்திரியின் கேள்விக்கு அவர் "எங்கும் தொழுது கொள்ளலாம் , அவரை ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்றார் (வசன 21,24)",பின்பு அவள் சென்று தம் கிராமத்தில் உள்ளவர்களிடம் சொல்லி,அவர்கள் இயேசுவை விசுவாசித்து உலக ரட்சகர் என அறிந்துகொண்டார்கள்.பாரம்பரியங்களை பற்றிக்கொண்டு இருந்த சமாரிய மக்கள் மேசியாவாகிய கிறிஸ்துவை அறிந்து கொள்ள இயேசு இந்த சமாரிய பெண்ணை பயன்படுத்தினார்.

முடிவுரை :
இரட்சிப்பை இலவசமாய் பெற்ற நாம், இன்று ஏதோ ஒரு பாரம்பரியம் , விக்கிரகங்களுக்கு அடிமைப்பட்டு பரிசுத்த வாழ்வை இழந்து நிற்கிறோமா அல்லது ஆவிக்குரிய தாகத்தை ஜீவத்தண்ணீரை பெற்று கொண்டு பலருக்கு பயன்படும் நீரூற்றாய் இருக்கிறோமோ? என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
வெளி 22:17. ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 
ஆமென்.

Post a Comment

0 Comments