SMC Lenten Meditation 2024
தியானம்: 18 / 40 - தேவ ஆட்டுக்குட்டி
எழுதியவர்: செல்வன். பா. மனோஜ் கிஷோர்
தலைப்பு: தேவ ஆட்டுக்குட்டி
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
வசன இருப்பிடங்கள்:
யோவான் 1.29, 36
வெளி
தலைப்பின் அர்த்தம்:
பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஆடு பிரதானமான பலி பொருளாக பயன்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவும் தன் ஜீவனை பலியாக கொடுக்க தேவனால் அனுப்பட்டதால், தேவ ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்பட்டார்.
விளக்கவுரை:
பயன் இல்லையோ?
பலி செலுத்தும் முறை வழக்கத்தில் இருந்த ஆதிகாலத்தில் வேறுபட்ட வகைகளில் பலிகள் இருந்தன. அதில் ஒன்று பாவ நிவாரண பலி. ஒரே ஒரு முறை பலி செலுத்துவது நிரந்தர தீர்வு இல்லை மற்றும் போதுமானதாக இல்லை. இது மக்களுக்கு முழுமையான இரட்சிப்பை கொடுக்கவில்லை. ஆகவே இந்த முறையில் மாற்றம் தேவைப்பட்டது.
முடித்து வைத்தாரே:
தேவ ஆட்டுக்குட்டியாக வந்த இயேசு கிறிஸ்து தம் ஜீவனை நிரந்தர ஒரே பலியாக கொடுத்து மனுக்குலத்துக்கு வாழ்வு கொடுத்தார். ஏதேன் தோட்டத்தில் மரத்தில் ஆரம்பித்த தீய வினை, கல்வாரி தோட்டத்தில் மரத்தில் நிறைவு பெற்றது. பாவத்தை சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் மீட்பு பெற்றோம்.
நிறைவுரை:
கடவுள் தன்னையே தேவ ஆட்டுக்குட்டியாக தாழ்த்தி அர்ப்பணித்தார் என்றால் நாம் எம்மாத்திரம்? நம் மீதுள்ள கரிசனையால் தன் ஜீவனையும் பொருட்படுத்தாமல் ஒப்புக்கொடுத்தார். நாமும் அவ்வாறே, இயேசுவை முன்மாதிரியாக கொண்டு பிறர் நலன் கருதி, நம்மை அர்ப்பணித்து செயல்பட முன்வருவோம். ஆமென்.
0 Comments