SMC Lenten Meditation 2024
தியானம்: 17 / 40 - வார்த்தை
எழுதியவர்: செல்வன். சா. அகஸ்டின் தாமஸ்
தலைப்பு: ஒளி
யோவான் 1:9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
வசன இருப்பிடங்கள்:
யோவான் 1:4 ,5,10,
தலைப்பின் அர்த்தம்:
அவருடைய ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது. ஜீவன் என்பதுக்கு உயிருள்ளவர் என்று பொருள்.
விளக்கம் :
ஒளி என்பது இருளுக்கு எதிரி போன்றது.
நம்முடைய வாழ்க்கையின் பின்னணி எவ்வளவு பாவம் நிறைந்ததாக இருந்தாலும் ,அறியாமை நிறைந்ததாக இருந்தாலும், அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருளில் இருக்கும் வாழ்கையை வெளிச்சம் ஆக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இருளில் நாம் இருப்போமேயானால் நம்மால் எதையும் காண இயலாது .
"கிறிஸ்து இயேசு என்னும்அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை" யோவான் : 1.5. நம் வாழ்வில் கிறிஸ்து என்னும் ஒளி இருக்கும் போது, பாவம், தோல்வி, பயம் மற்றும் எந்தவொரு இருளும் நம்மை நெருங்க முடியாது.
நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம் வாழ்வை பிரகாசிக்க செய்ய இயேசு என்னும் ஒளியால் முடியும். யோவான் 12.36 இல் இயேசு சொன்னது:*ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார்."
முடிவுரை :
ஆண்டவர் சிறுவயது முதலே என்னை தெரிந்து கொண்டாலும், நான் என்னுடைய பதினொன்றாம் வகுப்பு முதலே, அவரை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். கடவுள் எனக்கு தந்த வாக்குத்தத்த வசனம்: 'உன்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேன்'. பன்னிரண்டாம் வகுப்பில் என்னுடைய பாடப்பிரிவில் முதல் மாணவனாக தேர்ச்சிபெற்றேன். இது "நான் உன்னைப் ....., உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்" என்ற
வாக்குத்தத்தை போலவே நிறைவேறிற்று. இருப்பினும் எனக்குள் பெருமை எனும் இருள் வர தொடங்கியது நான் ஆண்டவர் கொடுத்த வார்த்தையை மறந்து என் சுயபெலத்தினால் சாதித்தது போல,என்னை அறியாமலேயே நினைக்க ஆரம்பித்தேன். ஆறு மாத காலம் ஆகியும் எந்த கல்லூரிகளிலும் இடம் கிடைக்காமல் சுற்றித்திரிந்தேன். அனைத்து கலந்தாய்வும் முடிவு பெற்று விட்டது எனக்கு இறுதியாக இருந்த வாய்ப்பு துணை மருத்துவ படிப்பு கலந்தாய்வு மட்டுமே. நான் மீண்டுமாக ஆண்டவரின் பாதம் செல்ல ஆரம்பித்தேன். தினமும் மூன்று வேலை ஜெபிப்பதாக ஒப்புக்கொடுத்தேன்.எனக்குள் விசுவாச போராட்டமும் அதிகரித்தது. கலந்தாய்வுக்கு முந்திய இரவு சென்னையில் முழு இரவு ஜெபத்தில் பங்கேற்றேன். அங்கேயும் ஆண்டவர் வாக்குத்தத்ததை (ஆதி 12.2) நினைவுகூர்ந்தார். நான் தரவரிசையில் 2800 - ஆவது இடத்தில் இருந்தாலும், எனக்கு திருநெல்வேலி மருத்துவ கல்லூரிலே [B.sc Dialysis Technology]இடம் கிடைத்தது. என் வாழ்க்கையின் அந்த தருணத்தில் இருளானது என்னை சூழ்ந்தாலும், இருளானது என்னை முழுமையாக பற்றிகொள்ளவில்லை. அநேக வேளைகளில் நாம் ஆண்டவரை விட்டு தூரம் சென்று இருளில் இருப்போம் அப்படி இல்லாமல் வெளிச்சத்தை நோக்கி சென்றால் இருள் நம்மை அணுகாது நாமும் மற்றவர்களுக்கு பிரயோஜனம் உள்ளவர்களாக இருப்போம்.
0 Comments