Ad Code

வார்த்தை • Word • SMC Lenten Meditation 2024

SMC Lenten Meditation 2024
தியானம்: 16 / 40 - வார்த்தை 
எழுதியவர்: செல்வன். ம. ஜெய பிரகாஷ்
தலைப்பு: வார்த்தை WORD 

வசன இருப்பிடம்:
யோவான் 1.1

 தலைப்பின் அர்த்தம்: 
வார்த்தை என்பதன் பொருள் ஒழுங்குடன் ஒரு செயலை நேர்த்தியாக வெளிப்படுத்துவது. வேதத்தில் வார்த்தை என்பது கடவுளாம் தேவனை குறிக்கிறது வார்த்தையாகிய கடவுள் மனிதனாக இயேசு என்னும் பெயரில் வெளிப்பட்டார்.

விளக்கவுரை:
 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 
(யோவான் 1:1)

என்கிற வார்த்தையின் படி, உலகம் உண்டாவதற்கு முன்னே தேவன் வார்த்தையாய் செயல்பட்டார். உலகத்தை படைக்கும் போது வானம் உண்டாகட்டும் ஒளி உண்டாகட்டும் என வார்த்தையாய் வெளிப்பட்டார் தேவன். தேவனிடத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தையானது பின்னர் தன் ஒரே மைந்தனாம் கிறிஸ்துவாய் இவ்வுலகத்தில் வார்த்தை மாம்சமானது. தேவனாகிய வார்த்தை ஆதியிலே இருந்தது அந்த வார்த்தை பிதாவினிடத்திலிருந்தது அந்த வார்த்தை மாம்சமாகி இயேசு கிறிஸ்துவாய் இவ்வுலகத்தில் வெளிப்பட்டது.
வார்த்தையாய் செயலை செய்த தேவன் வார்த்தையான தன்னை வெளிப்படுத்தினார் குமாரன் வழியாய்.

அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் அவருடைய மகிமையை கண்டும் அது பிதாவுக்கு ஒரே பேரானவருடைய மகிமைக்கு ஏற்று மகிமையாகவே இருந்தது என்ற வார்த்தையின் படி ஆதியிலே இருந்த வார்த்தையானது இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மாம்சமாகி கிருபையினாலும் உண்மையினாலும் நிறைந்து நம்மோடு கூட ஆவியானவராய் வாசம் பண்ணினார் அவருடைய மகிமையை நாம் கண்டோம் அது பிதாவுக்கு ஒரே மைந்தனுமாய் இருந்தவரின் மகிமைக்கு ஏற்ற சரியான இணையான மகிமையாகவே இருந்தது. 

முடிவுரை: 
வார்த்தையான கடவுளை இறுகப்பற்றிக் கொண்டால் தனது வார்த்தையினால் நம்மை தேற்றுவார், ஆற்றுவார், நம்மோடு கூட பேசுவார். ஆகவே செயல்களினால் வெளிப்படும் வார்த்தையானவரை நாம் கை கொண்டால் நம் செயல்கள் மூலம் அவர் வெளிப்படுவார். தேவன் வார்த்தையாகவே இருக்கிறார் என்பதற்கு ஏற்ற வசனம் என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை என்று வேதத்தில் காண்கிறோம் ஏனெனில் தேவன் வார்த்தையாய் இருக்க வார்த்தை எப்படி ஒழிந்து போகும். வார்த்தையான கடவுளை ஆவியானவரோடு கூட பற்றிக்கொள்ளுவோம் வார்த்தையாம் கடவுள் நமக்கு வார்த்தைகளை அருளுவாராக. ஆமென்.

Post a Comment

0 Comments