தியானம்: 15 / 40 - இரட்சணியக் கொம்பு
எழுதியவர்: திரு. ஜெ. ஜோ அகஸ்டின்
தலைப்பு: இரட்சணியம்
லூக்கா 2:32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
வசன இருப்பிடம்:
லூக்கா 2:32
தலைப்பின் அர்த்தம்:
உம்முடைய இரட்சணியம் என்பதின் பொருள் தம் மக்களை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்பவர் என்பதாகும்.
விளக்கவுரை:
இயேசு யார் என்று பார்க்கும்போது அவர் தமது ஜனத்தை அவர்களது பாவத்திலிருந்து மீட்பவர். தமது ஜனம் என்பது இஸ்ரவேலரயோ அல்லது கிறிஸ்தவர்களையோ மட்டும் குறிக்கவில்லை. ஏசாயா 52:10ஆம் வசனத்தின் பின்பகுதியில் “பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவராகிலும் கெட்டுப்போவது அவருடைய சித்தம் அல்ல.
குறிப்பாக பாவத்திலிருந்து விடுவிக்கவே இயேசு வந்தார் என்பதை அறிவோம். ஏன் என்று பார்க்கும்போது பாவமே கர்த்தருடைய முகத்தை மனிதன் காணக்கூடாதபடிக்கு மறைக்கிறது (ஏசாயா 59:2). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை, தொடர்பை துண்டிக்கிறது. நமது தேவன் தம் ஜனங்கள் தன்னோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். அதற்கு தடையாக இருக்கும் பாவத்தை நமக்காக சுமந்து தீர்த்தார்.
ஏன் அவருடைய உறவு என்று பார்க்கும்போது அவரோடு இருப்பவர்களே அவரை புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை செயல்படுத்தமுடியும். சீஷர்களை இயேசு தெரிந்துக்கொள்ளும்போது அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும் என்று மாற்கு 3:14ல் குறிப்பிடப்பட்டிருக்கிறதை வாசிக்க முடியும்.
முடிவுரை:
அனைத்து படைப்புகளும் அவருக்கென்றும் அவரைக்கொண்டும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது (கொலோ 1:6). அவருக்காக அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் பாவத்துக்கு அடிமையாக வாழாமல் இயேசுவுக்கும் அவருடைய சித்தத்துக்கும் அர்ப்பணிப்போம் முடிவு அவரை அவரே நம்மை வழுவாமல் காத்து இரட்சித்து வழிநடத்துவாராக. ஆமென்
0 Comments