1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: உயிர். திரு. முன். 4ம் ஞாயிறு (லெந்து 3)
தேதி : 03/03/24
வண்ணம்: கருநீலம்
திருமறை பாடங்கள்:
சங்கீதம் :116
2. திருவசனம் & தலைப்பு
ஜெபத்தில் நிலைத்திரு
தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
லூக்கா நற்செய்தி 18:7 (திரு விவிலியம்).
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18:7
(பவர் திருப்புதல்).
3. ஆசிரியர் &அவையோர்
இந்த நற்செய்தி நூலை எழுதியவர் லூக்கா என்பவர் ஆவார். இவர் கிரேக்க இனத்தை சார்ந்த மருத்துவர் (கொலோ 4:14). இவர் பவுல் அப்போஸ்தலரின் நண்பரும் மற்றும் உதவியாளருமாயும் இருந்தார். அப்போஸ்தலர் நடபடிகள் லூக்கா நற்செய்தியாளரால் எழுதப்பட்ட நூல். லூக்கா நற்செய்தி நூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இவ்விரண்டு நூல்களும் கனம் பொருந்திய தெயோபிலு -வுக்கும் மற்றும் பிற இனத்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த நூல் சுமார் கி.பி. 60-ல் ரோமில் வைத்து லூக்கா எழுதிருக்க வாய்ப்பிருக்கிறது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எருசலேம் அளிக்கப்பட்ட கி.பி. 70 -க்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
5. வசன விளக்கம்
லூக்கா 18:1-8 பகுதி 17:20-37 பகுதியின் மைய கருத்தை (மனுஷகுமாரனின் வருகை) நிறைவு செய்கிற பகுதியாக இருக்கிறது மற்றும் 11: 5-8 -இல் உள்ள உவமைக்கு இணையொத்ததாய் உள்ளது. லூக்கா 18:1-8 ன் பரந்த பகுதி (Wider Context) மனுஷகுமாரனின் முடிவு காலத்தை ( Eschatological Events) பற்றி குறிப்பிடுகிறது (17:20-31& 18:8) மற்றும் குறுகிய சூழல் (Immediate Context) ஜெபத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதையும் அப்படிப்பட்ட ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் தருவார் என்பதையும் குறிப்பிடுகிறது (18: 1,7,8).
இயேசு கிறிஸ்து *எதிர்மறையான* காரியங்களை வைத்து **நேர்மறையான** காரியங்க ளை விளக்குக்கிறார். இங்கு அநீதியுள்ள, கடவுளுக்கு பயப்படாத மற்றும் மனிதர்களை மதிக்காத நியாயாதிபதியே ஏழை விதவையின் விடாப்பிடியான வேண்டுதலுக்கு இரங்கி வந்து நியாயம் செய்வானேயாகில், நீதியுள்ள நியாயாதிபதியாகிய ஆண்டவர் தம்மை நோக்கி இரவும், பகலும் ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருந்து கூப்பிடுகிறாவர்களின் விஷயத்தில் எவ்வளவு சீக்கிரமாக (Quickly ) பதில் செய்வார். என்பதை இயேசு கிறிஸ்து * இந்த உவமையின் மூலம் கற்றுக்கொடுகிறார்
6. வாழ்வியல்
*ஜெபத்திலே உறுதியாய் நிலத்திருப்பதை* மைய கருத்தாய் கொண்டு இயேசு போதிக்கிறார். வசனம் 8-இல் உள்ள விசுவாசம் என்ற வார்த்தை ஆண்டவருக்குள் அவருடைய வருகை மட்டும் நாம் தொடர்ந்து நிலத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதர்கள் *உடனடியாக* ( *Immediately* ) எல்லாம் நடக்க வேண்டும் என்பதை விருப்புகின்றன ஆனால், ஆண்டவர் நம்முடைய வாழ்வில் எல்லாவற்றையும் *விரைவாக* ( *Quickly* ) கொடுக்க விரும்புகிறார் அதற்கு நாம் ஜெபத்திலே அவசரம் இல்லாமல் உறுதியாய் நிலத்திருக்க வேண்டும்.
எழுதியவர்:
திரு. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி.
0 Comments