SMC Lenten Meditation 2024
தியானம்: 14 / 40 - இரட்சணியக் கொம்பு
எழுதியவர்: திரு. ஜெ. பிளஸ்ஸிங் நியூமேன்
தலைப்பு: இரட்சணியக் கொம்பு
லூக்கா 1:75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
வசன இருப்பிடம்:
லூக்கா 1:75
சங்கீதம் 18:2
தலைப்பின் அர்த்தம்:
இங்கே நாம் இதனுடைய அர்த்தம் என்ன என்று பார்த்தால்
இரட்சணியம் = இரட்சிப்பு(salvation)
கொம்பு = ராஜா ( தானியேல் 7:24” அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்“)
இரட்சணியக் கொம்பு = இரட்சிப்பின் ராஜா
இயேசுவுக்கு பல்வேறு நாமங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று “இரட்சணியக் கொம்பு” (இரட்சிப்பின் ராஜா).
விளக்கவுரை:
இரட்சணியக் கொம்பு என்கிற வார்த்தை வேதாகமத்தில் இரண்டு இடத்தில் வருகிறது: 1. லூக்கா 1:75 & 2. சங்கீதம் 18:2
"இரட்சிப்பு" என்ற வார்த்தையானது "மீட்கப்பட்டது", "நியாயப்படுத்தப்பட்டது" மற்றும் "மன்னிக்கப்பட்டது" என்பதற்கு ஒத்ததாகும். நாம் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறோம் என்பதை கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் நம்மை நேசிப்பதால், நம்முடைய பாவம் கோரும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒரு வழியை அனுப்பினார். கடவுள் இரட்சிப்பின் பரிசை அனுப்பினார், அது அவருடைய மகன் இயேசு. இயேசு நமக்குப் பதிலாக மரித்து, நாம் கடவுளோடு உறவாடுவதற்கான வழியை உருவாக்கினார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் விலைமதிப்பற்ற பரிசை ஏற்றுக்கொள்வதுதான் அப்படி செய்தால் நாம் மீட்கப்படுவோம் மற்றும் மன்னிக்கப்படுவோம்.
அப்போஸ்தலர்4:12: அவராலேயன்றி (இயேசு ) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
சங்கீதம் 74:12: பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
இரட்சிப்பினால் கிடைக்கும் நன்மைகள்:
1. பாவங்கள் மன்னிக்கப்படும் (மத்தேயு 1:21).
2. தேவனுடைய பிள்ளைகளாகிறோம் (மீகா 7:7)
3.பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வோம்
முடிவுரை:
இரட்சிப்பின் கொம்பு- நமது இயேசு கிறிஸ்துவின் வருகைக்காய் நாம் எதிர்நோக்கலாம். கடவுளும் அவருடைய மக்களும் வெற்றிபெறுவதை நாம் காணும் காலமாக இருக்கும். தீமை ஆட்சி செய்ய அனுமதிக்கப்படாது. ஆனால் நன்மை தீமையை வென்றெடுக்கும்.
இயேசு தாவீதின் குடும்பத்திலிருந்து எழுப்பப்பட்ட நமது இரட்சிப்பின் கொம்பு. அவர் உண்மையான வெற்றி மற்றும் புகழின் சின்னம். அவர் நமக்கு ஆவிக்குரிய வெற்றியைக் கொடுக்கும் வலிமையான கொம்பு மேலும் அவர் உயர்த்தப்பட்ட கொம்பு. பிலிப்பியர் 2:12 இல், பவுல் இவ்வாறு கூறுகிறார்: “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும் பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” ஆமென்.
0 Comments