Ad Code

அருணோதயம் • Day Spring • SMC Lenten Meditation 2024

SMC Lenten Meditation 2024
தியானம்: 13 / 40 - அருணோதயம்
எழுதியவர்: திரு. டெ. டைட்டஸ்

தலைப்பு: அருணோதயம்
லூக்கா 1:78 & 79 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். 

வசன இருப்பிடங்கள்:
லூக்கா 1:78 & 79
ஏசாயா 9.2

தலைப்பின் அர்த்தம்:
சூரியனின் தோற்றம்; விடியற் காலம்; Day spring. இந்த வசனத்தில் விடியலாக இயேசு கிறிஸ்து வருகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

விளக்கவுரை:
வேதாகமத்தல் மூன்று முறை அருணோதயம் பயன்படுத்தப் பட்டுள்ளது: உன்தைப்பாட்டு 6:10; ஓசியா 6:3; லூக்கா 1:79. குறிப்பாக லூக்கா 1.79 இல் சகரியா இயேசுவை குறிப்பிடும் வண்ணம் அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

அருணோதயத்தின் மேன்மை:
அருணோதயம் விடியலை தருகிறது. அதாவது இருள் நீங்கி வெளிச்சம் வருகிறது. அவ்வாறு இயேசுவின் பிறப்பு, பாவத்தின் இருளின்று விடுதலை கொடுத்து ஒளியின் வாழ்வு வாழ்ந்திட வழி நடத்துகிறது. "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்" என்று லூக்கா 1.78 சொல்லுகிறது.

மேலும் அருணோதயம் தரும் வெளிச்சம் சரியான வழி காட்டும். அவ்வாறு மேசியா என்னும் இயேசு நம்மை சந்திக்கும் போது சமாதான வழியில் நடத்துவார் என்று இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. "நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்" என்று லூக்கா 1.79 முன் வசனத்தில் வாசிக்கிறோம்.

நிறைவுரை:
ஓசியா 6:3 சொல்லுகிறது: "அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம், அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது, அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்." ஆண்டவரை தேடும் போது, அவரின் அருணோதயம் நமக்கு கிடைக்கிறது.இந்த அருணோதயமாகிய இயேசு கிறிஸ்து என்னும் விடியல் நம்முடைய வாழ்வில் உதிக்காவிட்டால் இந்த மேன்மை நமக்கு கிடையாது. எந்த சூழ்நிலையிலும் நமக்கு விடியல் தரும் கதிரவன் அவரே. ஆகவே, அருணோதயமாககிய இயேசுவை தினம் உதிக்க செய்வோம். அவர் காட்டிய வழிகளில், பண்புகளில், செயல்களில் தினம் வசந்த கால விடியலாக வாழ்வோம்.

Post a Comment

0 Comments