Ad Code

விடுதலையளிக்கும் ஆராதனை • Worship that Delivers • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்:
ஞாயிறு: உயிர். திரு. முன் வரும் 2 ம் ஞாயிறு (லெந்து4)
தேதி:10/02/2024
திருமறை பாடங்கள்:
ப. ஏ: யாத் 3:11-18
பு. ஏ: அப் 16:25-34
சங்கீதம்: 137
சுவி. லூக். 13:10-17

 2.திருவசனம்& தலைப்பு:
விடுதலையளிக்கும் ஆராதனை
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

 3. ஆசிரியர் & அவையோர்
இயேசு கிறிஸ்துவின் செயல்களை & அற்புதங்களை அவரின் சுபாவங்களை மக்களோடு அவர் இருந்து போதித்த காரியங்களை லூக்கா புறஜாதியாருக்கு எழுதுகிறார். லூக்கா ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 4.எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
கி.பி.60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அனைவராலும் நம்பப்படுகிறது. ரோமா புரியில் இருந்து எழுதி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 5. வசன விளக்கம்:
லூக்கா 13: 10-18 வரையிலான பகுதியில், எவ்வளவேனும் நிமர கூடாத கூனி ஜெப ஆலயத்தில் இருக்கிறார். பெலவீனப்படுத்தும் ஆவியை கொண்ட அந்த பெண்மணிக்கு சுகம் அவசியமான ஒன்றாகும்.. தனக்கு எப்படியும் சுகம் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்ற முழு விசுவாசத்தோடு 18 ஆண்டுகளாக காத்து கொண்டிருக்கிறார்.  இயேசு அப்பெண்மணியை கவனிக்கிறார், பிசானின் பிடியில் இருந்து அவர்களுக்கு விடுதலை கொடுக்கிறார். பின்னர் கடவுளை அப்பெண்மணி மகிமைப்படுத்துகிறார்.

நாமும் கடவுளை, இவ்வுலக அடிமைப்படுதலில் இருந்து நம்மை விடுவித்த நன்மைக்காக ,அவரை  ஆராதிக்க, விடுவிக்கப்பட்டு இருக்கிறோம் மேலும் இன்றும் வழி நடத்தப்பட்டு கொண்டும் இருக்கிறோம்....  சங்கீதம் 136 -ல் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் ஒரு வேளை இப்படித்தான் துதித்து இருப்பார்கள்... "கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது" என்று!நாமும் நமக்கு விடுதலை கொடுத்த ஆண்டவரை , " கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது"என்று ஒவ்வொரு நாளிலும் மகிமைப்படுத்துவோம்.

 6. வாழ்வியல்:
நமது வாழ்விலும் இப்படி ஒரு அனுபவம் கண்டிப்பாக இருந்திருக்கக்கூடும். நெடுநாட்களை கர்த்தருடைய சந்நிதியில் எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா என எதிர் பார்த்து கொண்டிருப்பீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் நம்பிக்கை வீண் போகாது. அதற்கு பலன், சமாதானம், விடுதலை மற்றும் சகலமும் கிடைக்கும். கர்த்தரை துதிப்பதும், அவரை ஆராதிப்பதும், அவருடைய சந்நிதியில் காத்திருப்பதும் நமக்கு நன்மையான ஈவுகளை தரும் என்பதில் சந்தேகமில்லை.

நாம் கற்றுக்கொண்ட இந்த தியானத்தின் மூலம், "ஆண்டவரை ஆராதிப்பதன் மூலம் நமக்கு விடுதலை உண்டு"," ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து அவரை ஆராதிக்க வேண்டும்". எனவே, நாம் ஆராதிப்போம்! ஆண்டவரின் மீட்பை பெற்றுக் கொள்வோம்!!
" என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே". சங்கீதம் 103:1,2 

7. அருளுரை குறிப்புகள்
 1. ஆராதனை விடுதலையின் ஆயுதம்
2. விடுதலையின் நிமித்தம் ஆராதனை செய்ய வாருங்கள்

 எழுதியவர்:
இ. கோயில் பிள்ளை
பி. டி. முதலாமாண்டு, 
கன்கார்டியா இறையியல் கல்லூரி, 
நாகர்கோவில்.

Post a Comment

0 Comments