SMC Lenten Meditation 2024
தியானம்: 23 / 40 - கோதுமை மணி
எழுதியவர்: செல்வன். பா. மனோஜ் கிஷோர்
தலைப்பு : கோதுமை மணி
யோவான் 12:24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
வசன இருப்பிடங்கள்: யோவான் 12:24
தலைப்பின் அர்த்தம்:
பண்டைய காலத்து மக்களின் உணவு முறைகளில் கோதுமை என்பது பெரும் பங்கை கொண்டுள்ளது.கோதுமையின் ஒரு தலையில் 50 (Kernel) மற்றும் 1 பவுண்டில் 17,000 Kernel உள்ளன. Kernel என்பது கோதுமை செடி வளரும் விதை. கோதுமை மணியாக இயேசு எப்படி பலன் கொடுக்கப் போகிறார் என்பதை குறித்து அவரே ஒப்பிட்டு சொன்ன உருவகம் இதுவாகும்.
விளக்கவுரை :
மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும்.
கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். அல்லது அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். ஆனால், அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பு அல்ல.
முடிவுரை :
உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். சுவிஷேத்தை விதைக்கும் வண்ணமாக விதைக்கப்பட்ட கோதுமை மணிகள் நாம் எப்படி ஒரு கோதுமை மணியானது ஒற்றையாக விதைக்கப்பட்டு பலன் கொடுக்கிறதோ அதுபோன்று நாமும் கோதுமை மணியாக தேவனுக்கு மகிமை சேர்ப்போம். ஆமென்.
0 Comments