Ad Code

திராட்சைச்செடி 🍇 SMC • Lenten Meditation

SMC Lenten Meditation 2024
தியானம்: 24/ 40 - திராட்சைச்செடி
எழுதியவர்: செல்வன். இ. கரண்சிங்
தலைப்பு: திராட்சைச்செடி
யோவான் 15:1 " நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்."

வசன இருப்பிடங்கள்:
யோவான் 15:1

தலைப்பின் அர்த்தம்:
இயேசு தன்னை திராட்சை செடிக்கு உருவகப்படுத்தி உள்ளார். 

விளக்கவுரை:
 "நான் மெய்யான திராட்சச் செடி" என்கிறார் ஆண்டவர். இங்கே "மெய்யான" என்று சொல்லும்போது, நிச்சயம் பொய்யான திராட்சச்செடிகளும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். செழித்து வளர்ந்து, கவர்ச்சியான தோற்றங்களைப் பெற்று எல்லோரையும் தம் பக்கம் இழுத்துவிடுகின்ற பொய்யான திராட்சச் செடிகள் பல நம் மத்தியிலே ஏராளமாகவே உண்டு. நாம் விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.

கிறிஸ்தவ வாழ்வு கனிதரும் வாழ்வு என்றும், கனி என்பது தேவனுடைய குணாதிசயங்கள் என்றும், அது முழுமையானது என்றும், பரிசுத்த ஆவியானவரே ஆவியின் கனியை நமக்குள் உருவாக்குகிறார் என்றும், கனி கொடுத்தல் என்பது நமக்கல்ல, பிறருக்கே நன்மை பயக்கும் வாழ்வு என்றெல்லாம் நாம் கற்றிருக்கிறோம். ஆக, கனி என்பது நம்மால் உருவாக்கமுடியாத ஒன்று என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நல்லதும் சரியானதும் பிரயோஜனமானதுமான மெய்யான கனி நம்மில் தோன்றவேண்டுமானால் நாம் மெய்யான திராட்சச்செடியில்தான் ஒட்டப்படவேண்டும் என்பதை யார் சொல்லி யார் தெரிந்துகொள்வது?

எது மெய்? எது பொய்? என தடுமாறும் மானிடனுக்கு இயேசுவானவர், இதைத்தான் விளங்க வைக்கிறார். "நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.கொடியானது திராட்சச்செடியிலே நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள்". இங்கே இன்னுமொரு விஷயம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. திராட்சச் செடியில் கனி வெளிவருவதில்லை; அதிலுள்ள கொடிகளிலேதான் கனி வெளிவருகிறது, கனி தோன்ற வேண்டுமானால் கொடி செடியுடன் சரியாக நேர்த்தியாக இணங்கியிருக்கவேண்டும். செடி தானாகக் கனிகொடுக்கமாட்டாது, முடியாது.

முடிவுரை: 
 நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்து நற்கனி கொடுக்கமாட்டோமா என்று தேவன் நம்பேரில் வாஞ்சையாய் இருப்பாரே என்ற பயம் இன்று நமக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. அன்றைய இஸ்ரவேல் செய்த அதே தவறை, இயேசுவின் இரதத்தினாலான மீட்பைப் பெற்ற நாமும் செய்வது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.நாம் கிறிஸ்த்துவுக்குள் நிலைத்திருந்தால் ந‌ன்மையான‌ ஈவுக‌ளைத்த‌ருவோம் என்ப‌தாகும்.

Post a Comment

0 Comments