SMC Lenten Meditation 2024
தியானம்: 24 / 40 - சத்தியம்
எழுதியவர். செல்வன். டெ. டேனிஷ்
தலைப்பு : சத்தியம்
யோவான் 14 :6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
தலைப்பின் அர்த்தம் :
ஆங்கில வேதகமத்தில் சத்தியம் என்ற வார்த்தைக்கு Truth என்ற பதம் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இயேசுகிறிஸ்து நம்பத்தக்கவர் அல்லது உண்மையுள்ளவர் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
விளக்கவுரை :
யோவான் 14:5 இல் தோமா கேட்ட கேள்விக்கு தான் யேசுகிறிஸ்து 6 ஆம் வசனத்தில் பதில் அளிக்கிறார். யோவான் சுவிஷேசத்தில் யேசுகிறிஸ்து நானே என்று பல முறை பல விதமாக தன்னை சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் வெளிப்படுத்துகிறார். அதில் ஒன்று தான் அவர் தன்னை சத்தியமாய் இவ்வசனத்தில் காட்டியது. இயேசுகிறிஸ்து சத்தியத்தை போதித்தவர் மாத்திரம் அல்ல.. சத்தியமாக வாழ்ந்தவரும் கூட.
யாத்திராகமம் 34:6 இல் பிதா சத்தியமுள்ளவராய் இருக்கிறது போல இயேசுகிறிஸ்துவும் சத்தியமுள்ளவராய் இருக்கிறார். யோவான் 1:14 இல் சொல்லப்பட்டது போல அவர் சத்தியத்தினால் நிறைந்த தேவன்.
முடிவுரை :
யோவான் 8:32, "சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் " சொல்லப்பட்டது போல சத்தியமாகிய அவரை நாம் அறிந்துகொள்ளும்போது எல்லா பாவ சாபங்களில் இருந்தும் அடிமைத்தனங்களில் இருந்தும் அவர் விடுதலை கொடுக்கிறார். அது மாத்திரம் அல்ல அவர் கொடுக்கும் விடுதலை மெய்யானது. (யோவான் 8:16)
மேலும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பல இடங்களில் சத்தியத்தை இழந்துவிடுகிறோம். அவருடைய உண்மையை நாமும் தரித்துக்கொண்டு பலரை விடுதலையாக்குவோம்.அவருக்கு சாட்சியாய் வாழ்வோம்.
ஆமென்.
0 Comments