SMC Lenten Meditation 2024
தியானம்: 25 / 40 - ஜீவன் / வாழ்வு
எழுதியவர்: செல்வன். கிளிண்டன் டென்னிஸ்
தலைப்பு : ஜீவன் / வாழ்வு
யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
வசன இருப்பிடங்கள்:
யோவான் 1:4, 14 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
தலைப்பின் அர்த்தம்:
ஒவ்வொரு உயிருக்கும் ஜீவன் ஒன்று இருக்கிறது ஆனால் எந்த ஒரு உயிரினமும் மற்றவர்களுக்காக ஜீவனை விட வரவில்லை.
விளக்கவுரை:
ஜீவன் தரும் ஒளி:
யோவான் 1:4 ஆம் வசனத்தின் படி இயேசு நம்மெல்லாருக்கும் ஒரு ஒளியாக இருக்கிறார். ஒளியில் நடக்கிறவன் ஒருக்காலும் இடறான் என்ற வசனத்தின்படி அவர் நமக்குள்ளே வந்து வாசம் பண்ணும்போது நாமும் மற்றவர்களுக்கு ஒளியாக காணப்படுவோம்.
நித்திய வாழ்வு தரும் ஜீவன்:
அவர் நம்மோடு இல்லாவிட்டால் நாம் இறந்தவர்களைப்போல் காணப்படுவோம். அப்பொழுது நமக்குள் ஜீவன் இல்லை.அந்த ஜீவனை அடைவதற்கு நாம் எல்லோரும் அவரை தம்முடைய ஆலயமாகிய சரீரத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுது அவர் நமக்கு எப்பொழுதும் அழியாத ஜீவனை நமக்கு கொடுப்பார்.
முடிவுரை:
பரிசுத்த பவுல் தமது அனுபவத்தில் இருந்து சொல்லுகிறார் (கலாத்தியர் 2:20): ".... இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்."
நம்முடைய வாழ்வு எப்படி பட்ட வாழ்க்கையாய் இருக்கிறது? இந்த தவக் காலத்தில் நம்மை அவருக்கு அர்ப்பணித்து அவர் நம்மில் செயலாற்ற ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
0 Comments