ஞாயிறு: லெந்து காலம் ஐந்தாம் ஞாயிறு
தேதி: 17/03/2024
வண்ணம்: செங்கரு நீலம்
திருமறைப் பாடங்கள்:
ஏசாயா 53. 1 - 12
1 கொரிந்தியர் 1:18- 31
லூக்கா 18. 23 - 34
சங்கீதம்: 73
2. திருவசனம் & தலைப்பு
சிலுவை : ஒரு புதிய பார்வை
1 கொரிந்தியர் 1:18
(பவர் திருப்புதல்) சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
(திருவிவிலியம்) சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
3. ஆசிரியர் & அவையோர்
கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது" என்ற அறிமுக வசனங்களில் (1 கொரி 1: 1 - 3) இருந்து இந்த நிருபத்தின் ஆசிரியர் மற்றும் அவையோர் யார் என அறிந்து கொள்ளலாம். பவுல் எபேசு பட்டணத்தில் இருந்து இந்த நிருபத்தை எழுதினார்.
பவுல் காலத்தில் கொரிந்து நகரில் 700,000 மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள்.பவுல் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாகவும் உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்ததால் வழிபாடு சார்ந்த வாணிகமும் தழைத்தோங்கியது. கொரிந்தியரைப் போல இருத்தல் என்னும் கூற்று ஒழுக்கக் கேடாய் வாழ்தலைக் குறித்தது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இக்கடிதத்தை தூய பவுல் கி.பி. 54-55ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. பவுல் கொரிந்திய சபையில் காணப்பட்ட பல குழப்பங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இக்கடிதத்தை எழுதினார். கொரிந்து சபை மக்களுக்கு கிறிஸ்தவ உபதேசம் குறித்த சரியான விளக்கத்தை கொடுப்பது பவுலின் நோக்கம்.
5. திருவசன விளக்கவுரை
1 கொரிந்தியர் 1:18-31 உலகத்தின் பார்வையில் சுவிசேஷத்தின் முட்டாள்தனத்தை விவரிக்கிறது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் கருத்தை யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் இருவரும் நிராகரித்தனர். ரோமானிய சிலுவையின் மீது இறக்கும் எந்த தேவனும், குறிப்பாக மனித பாவத்திற்காக ஒரு பலியாக, உலகக் கண்களால் பலவீனமான மற்றும் முட்டாள் தெய்வமாக பார்க்கப்படுவார். இருப்பினும், கடவுள், மனித அடிப்படையில், உலகின் பலவீனமான மற்றும் முட்டாள்களுக்கு கிறிஸ்துவின் சிலுவையை நம்பும் திறனைக் கொடுப்பதன் மூலம் ஞானிகளையும் வலிமையானவர்களையும் வெட்கப்படுத்துவார். இறுதியில், யாரும் அவருக்கு முன்பாக தங்கள் சொந்த பலத்தையும் ஞானத்தையும் பெருமைப்படுத்தமாட்டார்கள்.
பவுல் மனிதனின் ஞானத்தின் வார்த்தைகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்திருந்தால் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லுகிறார். ஏனென்றால் சிலுவை ஒரு மனிதனுக்கு "முட்டாள்தனமாக" தோன்றுகிறதா இல்லையா என்பது மனிதனின் முழு தார்மீக நிலையாகும். மேலும் ஒரு மனிதன் அதை "கடவுளின் சக்தி" என்று கண்டுபிடிப்பாரா இல்லையா என்பதை பொருத்தது.
எனவே இரண்டு எண்ணங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை தர்க்கரீதியாக இணைக்கப்படவில்லை, ஆனால் அவை இரண்டும் உண்மை. மனிதர்கள் அழிந்துவிடுகிறார்கள் அல்லது இரட்சிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஏனென்றால் சிலுவை அவர்களுக்கு முறையே 'முட்டாள்தனம்' அல்லது 'கடவுளின் சக்தி'.
6. இறையியல் & வாழ்வியல்
சிலுவை நம்மைப் புதிய பார்வையுடன் சிந்திக்கவும் பார்க்கவும் அழைப்பு கொடுக்கிறது. வெறும் சிலுவை அவமானத்தின் சின்னம் ஆக பார்க்கப்பட்டது. சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்க்கும் போது அது வெற்றியின் சின்னமாக புலப்படுகிறது. சிலுவை உபதேசங்கள் மூட்டாள்தனமாக பிறருக்கு தெரிந்தாலும், சிலுவையில் இயேசுவை பார்ப்போருக்கு கடவுளின் வல்லமை புலப்படும்.
7. அருளுரை குறிப்புகள்
சிலுவை - ஒரு புதிய பார்வை
1. இயேசுவைப் பார்ப்போம்
2. இறைவல்லமையை உணர்வோம்
3. இரட்சிப்பை அனுபவிப்போம்
எழுதியவர்
திரு. யே. கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்
இராமையன்பட்டி.
0 Comments