78 வது இந்திய சுதந்திர தினத்தை ஆசரிக்கிற அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். இந்திய மண் இறைபக்திக்கு பெயர் பெற்ற மண். நம்மில் நிறங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் இனங்கள் பலவாயினும் இந்தியர் என்ற சொல்லில் ஒன்றாகின்றோம். ஆம்! மெய்க் கடவுள் நம் மீது வைத்துள்ள அன்பும் பெரிது. தம் சந்ததியின் பிள்ளைகளாக நம்மை பாவிக்கின்றார். எப்படி?
இந்தியரும்
1. இறைவனால் படைக்கப்பட்டவர்கள்
இறைவன் தன் சாயலில் நம்மையும் படைத்துள்ளார். யூதர்கள் கடவுளுக்கு எவ்வளவு பிரியமோ, அதற்கு இணையாக இந்தியரும் அவருக்கு பிரியம்.
2. இறைநூலில் இடம்பிடித்தவர்கள்
பரிசுத்த வேதாகமம் "இந்து தேசம்" என்ற வார்த்தையை (எஸ்தர் 1.1) கொண்டுள்ளது நமக்கு கிடைத்த அரிய பாக்கியம்.
3. இறைத்தூதர்களின் வழி வந்தவர்கள்
கிறிஸ்து தம் பன்னிரு அப்போஸ்தலர்களை நாடுகளுக்கு அனுப்பிய போது இந்தியாவும் அதில் சிலாக்கியம் பெற்றது. தோமா & பர்தொலமேயு ஆகிய இருவரும் முதல் நூற்றாண்டில் இந்திய மண்ணில் திருப்பணி செய்தார்கள் என்றும் தோமா தமிழ் நாட்டில் மரித்தார் என்றும் வரலாறு சொல்லுகிறது.
அன்பானவர்களே, கிறிஸ்தவ வழிமரபு ஒரு அயல்நாட்டு வியாபாரம் அல்ல. அது கடவுளால் ஏற்படுத்தப்பட சந்ததி. இந்தியர் நாமும் அதில் இருப்பது பாக்கியம். இறைவனுக்கு எல்லைகள் இல்லை!!!
எழுதியவர்
மேயேகோ
0 Comments