Ad Code

மனுஷர் சாயலானார் • Likeness of Man

பிலிப்பியர் 2:6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். மனிதர்கள் தங்களை தேவர்கள் என்றும் சொல்லும் உலகில் வாழ்கிறோம். ஆனால் கடவுள் மனிதர் ஆனார் என்றால் அது கிறிஸ்தவத்தில் மட்டுமே உள்ள நம்பிக்கை. உலகமெங்குமுள்ள மக்களுக்கான நம்பிக்கை. அப்படிப்பட்ட சிறப்பான, மனுஷர் சாயலானார் என்ற வார்த்தையில் இருந்து மூன்று முக்கியமான கேள்விகளுக்கான பதிலை தியானிப்போம். 

முதல் கேள்வி. சாயல் என்றால் என்ன?
இதை நாம் புரிந்து கொள்ள கிரேக்க மொழியில் தேவ சாயலுக்கும், மனுஷ சாயலுக்கும் வேறு வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும். Eikon என்ற கிரேக்க வார்த்தை Nature அல்லது சாயலைக் குறிக்கக் கூடியது. Homophoia என்ற கிரேக்க வார்த்தை Appreance அல்லது உருவத்தைக் குறிக்க கூடியது. பிலிப்பியர் 2.7 இல் பவுல் பயன்படுத்திய வார்த்தை மனித உருவானவர் என்பதையே குறிக்கிறது.

இரண்டாம் கேள்வி: தேவ சாயல் எங்கே போனது?
அதாவது, தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதனின் தேவ சாயல் எங்கே போனது? 
முதல் குடும்பமாகிய ஆதாம் ஏவாள் செய்த பாவத்தினால் தேவ சாயலை அவர்கள் இழந்து போனார்கள். தேவ சாயலுக்கு ஏற்ற நற்குணங்கள் இல்லாத நிலையில் மனித சமுதாயம் மாறியது. அன்பு இல்லை. மனித நேயம் இல்லை. 

மூன்றாவது கேள்வி: ஏன் கடவுள் மனித உருவாக வேண்டும்?
மனிதன் இழந்து போன தேவ சாயலை மீண்டும் பெற கடவுள் மனித உருவானார். கடவுள் துவக்கத்தில் இருந்தே தூய ஆவியாக இருந்தார். மனிதன் மீது வைத்த அன்பினால், குமாரனாக மனித உருவில் வந்தார். தம் ஜீவனைக் கொடுத்து மனுஷரை மீட்டார். கடவுளின் மனித நேயம் அவர் மரணத்தில் வெளிப்பட்டது. 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, கடவுள் மனிதனுக்கு மீண்டும் தேவ சாயலைக் கொடுக்க பூமிக்கு மனித உருவில் வந்தார். யோவான் 10.14 சொல்லுகிறது: அந்த வார்த்தை மாம்சமானது. சிலுவை சின்னத்தை நம் கண் முன் கொண்டு வருவோம். இது இரண்டு காரியங்களை இயேசுவின் வாழ்வில் இருந்து நமக்கு உணர்த்துகின்றது. 
ஒன்று - Vertical wood - மேலிருந்து கீழ்நோக்கி - மனித வடிவில் வந்தார்.
இரண்டு - Horizontal wood - இரண்டு புறமும் - சக மனிதனாக சக மனிதரோடு வாழ்ந்தார்.

ஆகவே, நாமும் கீழிருந்து மேலே செல்ல, சக மனிதரோடு மனிதராக வாழ்வோம். பிறருக்கு நல்வாழ்வு கொடுக்க நம்மையே தியாகம் செய்வோம். ஆமென்.

Acknowledgement 
Meyego 

Post a Comment

0 Comments