சேலத்தின் முதல் மிஷனரி Rev.Henry Crisp அவர்களின் பிறப்பு 14.07.1803. லண்டன் மிஷன் சங்கத்தின் மூலம் 17.10.1827அன்று Rev.Henry Crisp அவர்கள் சேலத்திற்கு முதல் மிஷனரியாக அனுப்பப்பட்டார். சேலம் வந்த பொழுது அவருக்கு வயது 24 அவருடைய மனைவி Elizat Steffee அவர்கள் வயது 21. இளம் தம்பதியினராக வந்த முதல் மிஷனரி மற்றும் தற்போது உள்ள கோவை திருமண்டலத்தின் முதல் மிஷனரி இவர்களே.
சேலம் வந்து ஒரு மாதத்திற்கு உள்ளாக சுமார் 30 ஏக்கர் நிலத்தை தற்போதைய CSI லெக்லர் நினைவாலயம் CSI மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள உள்ளடங்கிய நிலத்தை லண்டன் மிஷன் பணி தளத்திற்காக ரூபாய்.4200 க்கு வாங்கினார்கள்....
15.11.1827 அன்று கோட்டை பகுதியில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். மேலும் 1830 இல்ஒரு பள்ளியை துவங்கினார் இப்பள்ளி 1875 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டு தற்போதைய Csi மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. அன்றைய காலத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமப்புறம் நகர்ப்புறங்களிலும் இருந்து இப்பள்ளியில் கிறிஸ்தவர் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத மாணவர்கள் அனைவரும் இப்பள்ளியில் பயின்றவர்களே....
3.2.1828 வருடத்தில் வளாகத்தில் பள்ளி கட்டிடத்தில் பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனையை போதகர் அவர்கள் நடத்தினார்கள். நாட்கள் செல்லச் செல்ல விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் ஆராதனைக்கு என்று 22.12.1830 அன்று துவங்கி 31.7.1831 ஆண்டுஒரு சிற்றாலயத்தை போதகர் அவர்கள் கட்டினார்கள்.
ஐயா அவர்களின் ஊழிய கரிசனையும் வாஞ்சையும் மிகவும் பெரிதாக இருந்தது சேலம் செவ்வாபேட்டை வார சந்தையில் சுவிசேஷத்தை அறிவித்தார். சேலம் அம்மாபேட்டையில் ஊழியத்தில் இருக்கும் பொழுது இவர் மீது கல்லெறிந்து தாக்கப்பட்டார்
ஐயா அவர்கள் சேலம் பகுதியில் ஊழியம் செய்த காலம் நான்கு ஆண்டுகள். ஆனால் இவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம் மாறுபட்ட மொழி ,கலாச்சாரம் உணவு பழக்கங்கள் சீதோசன நிலை பின்தங்கிய சுகாதார சூழ்நிலையில்தன்னுடைய வாலிப வயதில் தன்னுடைய இளம் மனைவியுடன் சேலம் பகுதியில் ஊழியம் செய்து வந்தார்கள்.
சேலம் வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 7.5.1829 அன்று தன்னுடைய இளம் மனைவி Elizat Steffee அவர்கள் 23 வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.
மேலும் இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தன்னுடைய 28 வது இளம் வயதில் 28.10.1831 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். இவர்களின் இருவரின் உடல்களும் சேலம்மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின் அருகாமையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது
Rev.Henry Crisp அவர்கள் தன் இளம் வயதில் தன் இளம் மனைவி மற்றும் குடும்பத்தைபிரிந்த நிலையிலும் தன்னலமற்ற தியாகம் நிறைந்த அவர் செய்த இறைபணியை நாம் நினைவு கூறுவோம்... இன்றளவும் அவர் செய்த பணிகளினால் பயனடைந்து கொண்டிருக்கும் நாம் அவர் நினைவுகளை நினைவுகூர்ந்து அவர் ஆற்றிய பணிகளை பேணிக்காப்போம் வாருங்கள்....
0 Comments