Ad Code

டதி மகளிர் மேனிலைப் பள்ளி பிறந்த கதை • School History

நாகர்கோவிலின் இதயப்பகுதியில்... டதி ஜங்ஷனில்..5 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. 

1819 ஆம் ஆண்டு, திருமதி. ஜோஹன்னா மீட் மிஷனெறி அம்மா இந்த இலவச..உண்டுறைப் பள்ளியைத் தொடங்கினார். Travancore ன் முதல் English medium girls school இதுவாகும். அக்காலத்தில், குமரிப் பெண்களின் பின்தங்கிய நிலையைக் கண்டு.. அவர்களை இப்பள்ளியில் சேர்த்து.. பாடமும் குச்சித்தையலும் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் குப்பாயங்கள் (ஒரு வகை சட்டை) அணிய அரசு அனுமதியளித்தது.

1821 —1854 வரை மார்த்தா மால்ட் அம்மையார் இதன் முதல்வராக இருந்தார். பள்ளியின் வளர்ச்சிக்காக, மேனாட்டிலுள்ள அவரது Friends ன் உதவியைச் சேகரித்தார்.

1903 ல்Matric exam 3மாணவிகள் எழுதி..வெற்றி பெற்றனர். அந்நாட்களில், Scott xian college ல் பெண்களைச் சேர்க்காததால் .அவர்களில் இருவர், Trivandrum த்திலுள்ள Maharajas college ல் F.A. படித்தனர்.

1894 ல் Teacher Training courseதொடங்கப்பட்டது.
பின்னர் டதி ஐயரின் பிள்ளைகளான ஆன்லி ஆலன், பியாட்ரிஸ் டதி ஆகியோர் இதன் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர். ஆன்லி ஆலன்..5 ஏக்கர் நிலத்தை 1900 ல் வாங்கி.. வளாகத்தை விரிவாக்கினார். பின்னர் அவர் பெல்பீல்டு வளாகத்தில் தங்கினார். அதனால் பள்ளித் தலைமைப் பொறுப்பை பியாட்ரிஸ் டதி ஏற்றார். திருவிதாங்கூரின் மிகச்சிறந்த பெண்கள் பள்ளியென்ற பாராட்டை இப்பள்ளி பெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வண்ணம்...  டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளி என்று பெயர் வைக்கப்பட்டது.

தொடக்கக் காலத்தில்...அனைத்து மிஷனெறிமார்களின் மனைவிகளும்..பின்னர் Miss. Harris,Miss. Morton, Miss. Maclroy , Miss. Daniel ஆகியோரும் இதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தனர். திரு.தேவசகாயம் தலைமையாசிரியரின் காலத்தில் பள்ளி உச்ச கட்ட வளர்ச்சியை அடைந்தது...!!! பல தடவைகள் State First வாங்கிய பள்ளி இது...!!! 
இன்னும் இதற்காக உழைத்தவர் பலர்...!! 

Post a Comment

0 Comments