Ad Code

அதிபரே இருப்பினும் அருளுரை மாறாது • பீட்டர் கார்ரைட் • USA President

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பீட்டர் கார்ட்ரைட் (Peter Cartwright) என்றொரு மறைப்போதகர் இருந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், கடவுளின் வார்த்தையை மிகவும் துணிவோடு போதித்து வந்தார்.

அப்படிப்பட்ட இவரிடம் ஒருவர், ஒரு சனிக்கிழமை மாலையில் வந்து, “நாளைக் காலை நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் கலந்து கொள்ள இருக்கின்றார். (இவர் அமெரிக்காவின் ஏழாவது அதிபர்) அதனால் நீங்கள் போதிக்கும்போது, கவனமாகப் போதிக்கவும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மறுநாள் காலை ஞாயிறு வழிபாட்டின்போது, பீட்டர் கார்ட்ரைட் தன்னுடைய போதனையைத் தொடங்கும்போது, “இந்த வழிபாட்டிற்கு அதிபர் ஆண்ட்ரு ஜான்சன் வந்திருப்பதாகவும், அதனால் நான் கவனமாகப் போதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டேன்” என்று சொல்லிவிட்டு, ஒருசில மணித்துணிகள் அமைதியாக இருந்தார். தொடர்ந்து அவர் போதிக்கும்போது, “ஒருவேளை அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் இங்கு வந்திருந்தால், அவர் விரைவில் மனம் மாறவேண்டும்; இல்லையென்றால் அவர் நரகத்திற்குத்தான் போவார்” என்று துணிவோடு போதித்தார்.

பீட்டர் கார்ட்ரைட் இவ்வாறு போதித்ததைக் கேட்டு, வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த எல்லாரும் அதிர்ந்து போனார்கள். ‘அதிபர் அவரை என்ன செய்யப்போகிறாரோ?’ என்று வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த மக்கள் அனைவரும் ஒருவிதமான பதற்றத்தோடு இருந்தபோது, வழிபடு முடிந்ததும் பீட்டர் கார்ட்ரைட்டிடம் வந்த ஆண்ட்ரு ஜாக்சன், “உங்கள் துணிவை நான் பாராட்டுகின்றேன். அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் என்னுடைய படையில் இருந்தால், இந்த உலகத்தையே நான் வென்றிடுவேன்” என்றார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பீட்டர் கார்ட்ரைட் தவறு செய்தது அதிபரே ஆனாலும், அவருடைய தவற்றை அஞ்சாமல் சுட்டிக்காட்டினார். இறைவார்த்தை, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொண்டு, தீய ஆவிகளுக்கு எதிராகத் துணிவோடு போராடுவோம் என்ற சிந்தனைத் தருகின்றது.

Post a Comment

0 Comments