Ad Code

தொழிலில் உண்மை • Business Sunday Sermon 2024 CSI Diocese of Tirunelveli


1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 24-ம் ஞாயிறு (திரித்துவ 23)
தேதி: 03/11/2024
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:

2. திருவசனம் & தலைப்பு  
   *தொழிலில் உண்மை* மத்தேயு 25:21
  (பவர் திருப்புதல்). அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 
     (திருவிவிலியம்). அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார். 

3. ஆசிரியர் & அவையோர் 
மத்தேயு என்னும் யூதர் இதன் ஆசிரியர் என்று தொடக்க (ஆதி) கால திருச்சபை அங்கீகரித்துள்ளது. இவருக்கு அல்பேயுவின் குமாரனாகிய லேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு (மாற்கு 2:14). மத்தேயு என்னும் பெயருக்கு "தேவனின் தானம்" என்று பொருள். இவர் இயேசு கிறிஸ்துவின் சீசர் மற்றும்பன்னிரெண்டு அப்போஸ்தலர்கலில் ஒருவர் ஆவார். இந்நூல் இயேசுவை மெசியாவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்டது. 

4. காலம் 
மத்தேயு எழுதப்பட்ட காலத்தை நிர்ணயிப்பது எளிதல்ல. மாற்கு நூலை அடப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டதால், மாற்கு நூலிற்கு பிற்பாடு கி. பி. 58-68 -குள் எழுதப்பட்டிருக்கும் என்று கருதுவது ஏற்புடையது.

5). திருவசன விளக்கம் 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நினையாத வேளையிலே வருவார் அப்படி அவர் வரும்போது நம் ஒவ்வொருவரிடத்திலும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பின் அடிப்படையில் கணக்கு கேட்பார் என்பதை மத்தேயு பணத்தை (ταλέντov=talent) மையமாகக் கொண்டு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார். 
 
 இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற தாலந்து (ταλέντov, talent) என்கிற வார்த்தை கிரேக்கத்தில் மிகப்பெரிய தொகையை குறிக்கிறது மற்றும் திறமைக்குத்தக்க பரிசு (gift or special aptitude) என்கிற வார்த்தையும் சரியாக பொருந்தும். ( 1 தாலந்து என்பது 6000 வெள்ளிப் பணத்தை குறிக்கிறது. ஒரு வெள்ளி பணம் என்பது ஒருநாள் சம்பளம்). 
புற தேசத்துக்கு பிரயாணப்படுகிற மனுஷன் தன் மூன்று ஊழியக்காரர்களுக்கும் அவர்களுடைய திறமைக்கு தக்கதாக தாலந்துகளை கொடுக்கிறார்(மத்.25:15); அதே நேரத்தில் தாலந்துகளை சரியாக பயன்படுத்தியவர்களுக்கு 
 சமமான வெகுமதிகளும் கொடுக்கிறார் (மத். 25:21,23).

தாலந்துகளை சரியாக பயன்படுத்தினதற்கான காரணம் ஐந்து மற்றும் இரண்டு தாலந்துகளை பெற்றவர்களிடத்தில் காணப்பட்ட உண்மை மற்றும் நம்பகத்தன்மை (V. 21- πιστός (pistos)=Faithful , trustworthy, loyal, or reliable). எஜமான் அவர்களுடைய திறமைக்கு தக்கபடி அல்ல மாறாக அவர்களுடைய குணத்திற்கு ( உண்மை நம்பகத்தன்மை) ஏற்றபடி வெகுமதிகளை கொடுக்கிறார்.

6). இறையியல் & வாழ்வியல் 
 ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் அவர் மீண்டும் வரும்போது நம்மிடத்தில் கொடுத்த பொறுப்பிற்கு கணக்கு கேட்பார். நாம் உண்மை மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது தான் ஆண்டவர் இந்த உலகத்தில் நமக்கு கொடுத்த பொறுப்பை சரியாக பயன்படுத்த முடியும் இல்லையென்றால் ஒரு தாலந்தை பெற்றவன் இப்படி நியாயம் தீர்க்கப்பட்டானோ (மத்.25:30) அப்படியே நாமும் நியாயம் தீர்க்கப்படுவோம். ஆதலால், இந்த பூமியில் ஆண்டவர் நமக்கு கொடுத்த எந்த பொறுப்பாக (ஊழியம், தொழில், படிப்பு, வேலை etc) இருந்தாலும் உண்மை உள்ளவர்களாகவும், நம்பத் தகுந்தவர்களாகவும் இருந்து எஜமானுடைய சந்தோசத்துக்குள் பிரவேசிப்போம்.

7) அருளுரை குறிப்புகள்
1). கொஞ்சத்தில் உண்மையும், உத்தமமுள்ள ஊழியக்காரன் (v.21a).
2). அநேகத்தின் மேல் அதிகாரியான ஊழியக்காரன் (v.21b).
3). எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசித்த ஊழியக்காரன் (v. 21c).

Written by
Mr. Rebin Austin T
Catechist 
CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments