தலைப்பு: தானியேல்: தவறாத ஜெபம்
வேத பகுதி: தானியேல் 6:10
வேதாகம நபர் குறிப்பு
தானியேல் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட யூதர் அவரது நம்பிக்கை ஞானம் மற்றும் தரிசனங்களை விளக்கும் திறனுக்காக அறியப்பட்டவர்.
விளக்கவுரை
தானியேல் 6ம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, தரியு ராஜா தன்னை அல்லாமல் அந்நிய தேவனிடத்திலோ அல்லது மனுஷரிடத்திலோ விண்ணப்பம் செய்ய கூடாது என்று பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்புகிறார். மேலும் அப்படி செய்பவனை சிங்கங்களின் கெபியில் போட்டுவிட உத்தரவு கொடுக்கிறார். ஆனால் தானியேலோவென்றால் தான் எப்போதும் செய்து வந்த படியே தினமும் மூன்று வேலை கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.
நாமும் நம்முடைய வாழ்க்கையில் தினமும் ஜெபிப்பது வழக்கம். ஆனால் ஏதேனும் பிரச்சனை வரும்போது நாம் ஜெபிக்கிறோமா என்பது கேள்விக்குறி. நாம் முக்கியமான வேலைகளில் இருக்கும்போதோ அல்லது பெலவீனத்தில் இருக்கும்போதோ நாம் அன்று ஜெபிக்க தவறி விடுகிறோம். ஆனால் தானியேல் நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஜெபிக்கிறார்.
கற்றுக்கொள்ளும் பாடம்
நமக்கு என்ன வேலை இருந்தாலும் பலவீனம் இருந்தாலும் ஜெபிப்பதில் தவற கூடாது. தானியேலை போல கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். தினமும் ஜெபம் செய்வதில் ஒரு போதும் தவற கூடாது. தினம்தோறும் தவறாமல் ஜெபிப்போம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம். ஆமென்
எழுதியவர்
திரு. பிரவீன் ஜோன்ஸ்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments