Ad Code

மிஷனரி துணுக்குகள் • Missionary History Notes


🦋 இந்தியாவின் முதல் மேற்கத்திய மருந்தகம் (Laboratorium Chymicum) 1732 ஆம் ஆண்டு Samuel Benjamin Knoll எனும் மருத்துவ மிஷினரி மூலம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.

🦋 1732-1739 வரை Chiristoph Theodosius Walther எனும் மிஷினரி ஐரோப்பியாவிற்கு அனுப்பிய உலர் தாவர மாதிரிகள் பட்டியலை கொண்டு 1743 ஆம் ஆண்டு Herbarium Tranquambariense எனும் புத்தகத்தை எழுதினார்.

🦋 1732-1737 வரை சென்னையின் வானிலை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட Johan Ernest Geister எனும் மிஷினரி முதல் தமிழ்நாடு வெதர் மேன் என அறியப்படுகிறார். Wind-und Wetterbeobachtungen Von (Observation on Wind and Weather) என்று தலைப்பிடப்பட்ட இவரது நாட்குறிப்புகள் ஜெர்மனியின் University of Freiburg இல் உள்ளன.

🦋 1739 இல் கடலூர் வந்த Johan Zachariah Kiernander என்ற மிஷினரி 1758 கல்கத்தா சென்று அங்கே முதல் லுத்தரன் பணித்தளத்தை உருவாக்கினார். இவர் தான் வங்காளத்தில் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவியவர், வில்லியம் கேரிக்கு கல்கத்தா மிஷனை அறிமுகம் செய்து வைத்தவர். தரங்கம்பாடி இல்லாமல் செராம்பூர் இல்லை.

🦋 1768 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Linnaean Taxonomy எனும் வகைப்பாட்டியலை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் தரங்கம்பாடி மிஷினரி Johan Gerhard Konig . 

🦋 1760 முதல் 1803 வரை தரங்கம்பாடியில் வசித்த மொரோவிய மிஷினரிகள் பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி திராட்சை இவர்களது கொடை .

🦋 மொரோவிய மிஷினரிகளில் ஒருவரான Dr. Benjamin Heyne நிலவியலில் (Geology) ஈடுபாடு கொண்டவர். பெங்களூரு லால் பாக்கினை ஒரு முறையான தாவரவியல் பூங்காவாக மாற்றியவர் இவர். ஆப்பிளை பெங்களூருக்கு அறிமுகப்படுத்திய இவர் தான் மெட்றாஸ் மாகாணத்தில் உருளைக்கிழங்கை பயிரிட பல முயற்சிகள் மேற்கொண்டவர். 

🦋 தமிழகத்தில் உள்ள ஏராளமான தாவரவியல், மற்றும் விலங்கியல் பெயர்களில் Konig, CS John, Rottler எனும் தரங்கம்பாடி மிஷினரிகளின் பெயர்கள் ஒட்டிக் கொண்டுள்ளன. 

🦋 இந்தியாவின் முதல் ஐரோப்பிய வானியல் மையம் 1787 இல் தரங்கம்பாடி சீயோன் தேவாலய கோபுரத்தில் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர் அந்த ஆலயத்தின் துணை ஆயராக இருந்த Engelhardt

🦋 1788-1791 வரை The Tranquebarian Society எனும் அறிவியல் சங்கம் தரங்கம்பாடியில் செயல்பட்டு வந்தது. 102 ஏக்கர் பரப்பளவில் ஒரு Botanical Garden நிறுவி பல்வேறு ஆய்வுகளை செய்தனர். 

🦋 அச்சு இயந்திரத்தை தாண்டி தரங்கம்பாடியின் அறியப்படாத அறிவியல் பங்களிப்பு மிகப் பெரியது.

Post a Comment

0 Comments