யாருக்காக ஓடுகிறோம்?
யாரென்ன செய்துவிட முடியும்?
யாவேக்காய் நிற்கும்போது
எவரென்ன சொன்னால் என்ன?
எதற்காக உழைக்கிறோம்?
எவர் இப்பொறுப்பு அளித்தார்?
எப்போதும் நிலைநிற்க
ஏன் உன்னைத் தெரிந்துகொண்டார்?
ஏமாற்றத்தோடு நிற்கவா?
எவர் சூழ்ச்சி செய்யலாகும்?
என்னோடு அவரிருந்தால்
பூலோக மனிதனுக்காக அல்ல...
பரமனுக்காக பாடுகளோடு ஓடினார்
பலர் தடுத்தும் இயலவில்லை
பாபிலோனிலும் மகிழ்வோடு பயணித்தார்
அவரே வேதாகம தானியேல்
அசையாமல் நின்றார்
அவரின் சரியான அர்ப்பணிப்பு
அலையிலும் மாறவில்லை
காலந்தோறும் நபர்கள் மாறினாலும்
தானியேல் தரங்குறையவில்லை
தானியேல் விடுமொரு சவால்
தாழ்த்தி அர்ப்பணிப்பாயா?
0 Comments