Ad Code

கிறிஸ்தவர்கள் விளையாட்டுப் போட்டி நடத்தலாமா? • Christianity and Sports

அன்று முதல் இன்று வரை விளையாட்டையும் மனிதரையும் பிரிக்க இயலாது என்பது உண்மை. ஆனால், விளையாட்டை திருச்சபை எப்படி ஊக்குவிக்கிறது என்பது நாம் ஆராய வேண்டிய காரியமாகும். பல்வேறு விளையாட்டு போட்டிகள் & நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், திருச்சபை அதை எப்படி நோக்குகிறது என்பது நாம் அறிய வேண்டிய செயலாகும்.

திருமறை & விளையாட்டு
வேதாகமம் நேரடியாக விளையாட்டுப் போட்டிகள் குறித்து சொல்லவில்லை. மேலும், விளையாட்டு வீரர்களை குறித்தும் இல்லை. ஆனால் விளையாட்டுகள், விளையாட்டுகள் (running, boxing, and wrestling) மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.

விளையாட்டு என்பது கடவுளின் படைப்பின் ஒரு நல்ல பரிசின் ஒரு பகுதியாகும். நிச்சயமாக, மனிதர்கள்தான் விளையாட்டுகளைக் கண்டுபிடித்தவர்கள், ஆனால் நமக்கு விளையாட்டுத்தனம் எங்கிருந்து வருகிறது? படைப்பாற்றல், மனித உறவுகளுக்கான ஆசை மற்றும் விளையாடுவதற்கான உள்ளுணர்வு ஆசை ஆகியவை, அனைத்து வயதினரும், அனைத்து கலாச்சாரங்களிலும் உள்ள அனைத்து மக்களிடமும், கடவுளின் சாயலில் படைக்கப்படுவதன் அர்த்தத்தின் ஒரு பகுதியாகும் ( ஆதியாகமம் 1:27 )

"ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்" (2 தீமோத்தேயு 2:5). என்கின்ற வசனம் கூட, விதிமுறைப்படி விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுகிறது. 
சகரியா 8:5 நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

⚽ சபை வரலாற்றில் விளையாட்டு⚽
⚽திருச்சபை வரலாற்றில் விளையாட்டு தகுந்த இடம் பெற்றிருக்கிறது.

⚽ மிஷனரிகள் பலர் விளையாட்டு திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர். தங்கள் பொழுதுபோக்காக வைத்துள்ளனர். உலகின் பல பகுதிகளிலும் கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கூடைப்பந்து போன்ற மேற்கத்திய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதில் கிறிஸ்தவ மிஷனரிகளும் YMCA அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்தனர்.

⚽ சில சபைகள் பண்டிகையை முன்னிட்டு ஒருநாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்துகின்றன.  

⚽ சபைகளுக்கு இடையில், சேகர அளவில் என சில இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

🏐 நன்மைகள்🏐
🏐 ஒருவருக்கு ஒருவர் ஒருமித்து நேரம் செலவிடும்போது, இணைந்து செயல்படும் மனப்பாங்கு வளர வழிவகுக்கும்.
🏐 யார் வெற்றி பெற வேண்டும் என்ற போட்டிப் மனப்பான்மையுடன் விளையாடாமல், நட்பை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
🏐 விளையாட்டு உடல்நலம் பேண வழிவகுக்கும்.
🏐 விளையாட்டுப் போட்டி நல்ல பொழுதுபோக்கு.
🏐 வேதாகமம் சார்ந்த விளையாட்டுகள் வேத அறிவையும் உடல் சார்ந்த விளையாட்டுகள் உடலையும், மனம் சார்ந்தவை மனதையும் வளர்க்கும். 

🏀நெறிமுறைகள்🏀
🏀 ஆலய ஆராதனை, ஜெப நேரங்களில் ஆலய வளாகத்தை விளையாட பயன்படுத்தக் கூடாது.
🏀 ஓய்வு நாள் ஆராதனைக்கு செல்லாமல், விளையாட செல்லக் கூடாது.
🏀 ஆலய மாண்பை கெடுக்கும் வகையில் விசில் அடித்தல், போதையில் விளையாடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
🏀 பொழுதுபோக்கு & மகிழ்ச்சி என்ற தெளிவு இருக்கும் போது, வீணான சலசலப்புகள் வாராது.
🏀 ஆலயத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது, ஒழுங்கும் கிரமுமாக நடத்த வேண்டும்.

கடினமாக விளையாடுங்கள், 
நியாயமாக விளையாடுங்கள், 
இறை மகிமைக்காக விளையாடுங்கள்,
எல்லாவற்றிற்கும் மேலாக, அது வழிபாடு.
எழுதியவர்
மேயேகோ

Post a Comment

0 Comments