என் சகோதரியே
சந்தோஷமாகப் போய்வாயே (3)
1. எந்தன் பரன் அருளால் என்றென்றும் நீ செழித்து சந்ததம் வாழ்ந்திருப்பாயே (2)
2. கோடானு கோடியாய் நீ குவலய மேற்பெருகி நீடாய் பெற்றிருப்பாயே (2)
3. சத்துருக்களை ஜெயித்து சந்ததியாய் தழைத்து இத்தரையில் வாழ்ந்திருப்பாயே (2)
4. கர்த்தருக்குப் பயந்து காலங்களைக் கடத்தி உத்தமப் பெயர் எடுப்பாயே (2)
5. சாந்தம் பொறுமை தயை நற்குணம் தானதர்மம் ஈந்து சுகித்திருப்பாயே (2)
6.பக்தன்.............க்கு பண்பாய் கீழ்ப்படிந்து நித்தம் வாழ்ந்திருப்பாயே (2)
7. தாதியாரோடு உந்தன் சாமான்களை எடுத்து நீதியாய் போய் வருவாயே (2)
8. ஏசுபரன் சுதன் தன் திருக்கரத்தால் உங்களை ஆசீர்வதிப்பாராகவே (2)
0 Comments