Ad Code

ஆதி நம்பிக்கைக்கு ஏகோவோமே • The Journey to the First Faith

இறைஇயேசுவில் அன்பானவர்களே,
நம் நம்பிக்கையின் நாயகர் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். 

ஆதி முதல் நம் நம்பிக்கையாய் இருக்கின்ற நம் தந்தையாம் கடவுள் இன்றும் நம்மோடு இருக்கிறாரே. அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. இந்த ஜீன் மாதத்திலும் இந்த நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு பயணிக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு கொடுக்கிறார். 

கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். 
சங்கீதம் 71:5

1. ஆதி நம்பிக்கையை வாஞ்சிப்போம்
(எபிரெயர் 6.12)
இறை நம்பிக்கையில் பூரண நிச்சயம் அடையும்படிக்கு அதைத் தொடர ஆசையோடு வாஞ்சிக்க வேண்டும்.

2. ஆதி நம்பிக்கையில் நிலைத்திருப்போம்
(எபிரெயர் 3.14)
நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்து விடாதபடிக்கு, நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.

3. ஆதி நம்பிக்கையை விதைப்போம்.
(எபிரெயர் 10.23)
நம்பிக்கையை அறிக்கையிடுவது முக்கியமானது. ஏனென்றால், அப்போது தான் நம் இளைய தலைமுறைக்கு அதை விதைக்க முடியும்.


புதிய கல்வியாண்டுக்குள் பிரவேசித்துள்ள நம் பிள்ளைகளிடத்தில் இறைநம்பிக்கையை விதைப்போம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவயது முதல் ஆண்டவரையே நம்பி இறுதி வரை வாழ்ந்த தாவீது அரசரைப் போல் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

 இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்
 




Post a Comment

0 Comments