மகிழ்சியாக வாழ வேண்டும் என்று எல்லாரும் விரும்புவோம். ஆனால் சில சூழ்நிலைகள் கவலைகள் நம்மை ஆட்கொள்ளும் போது, நாம் சோர்ந்து போய் விடுகிறோம். ஆனால், மீண்டும் நாம் அந்த மகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள சங்கீதக்காரர் தாவீதின் வாழ்க்கை சில காரியங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.
1. கண்டுபிடிப்போம் Find out
மகிழ்ச்சி இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடிப்பது தான் மகிழ்ச்சியை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
2. சரிசெய்வோம் Reconcile
சரியான காரணத்தைக் கண்டுபிடித்து மீண்டும் கடவுளோடு ஒப்புரவு ஆகும் போது அவர் மகிழ்ச்சியைத் தருகின்றார்.
3. பகிர்ந்துகொள்வோம் Share
கடவுள் நமக்குக் கொடுத்த மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் அந்த மகிழ்ச்சியில் பூரணமாக முடியும்.
ஆதி மகிழ்ச்சியைத் திரும்பவும் அனுபவிக்க, சங்கீதக்காரர் போல், உள்ளம் உடைந்து, உணர்ந்து இறைவனிடம் அருள் வேண்டி மன்றாடுவோம். "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்." சங்கீதம் 51:12
இறையாசி
உங்களோடிருப்பதாக...

0 Comments