விண்ணப்பத்தைத் தள்ளாத கடவுள்
சங்கீதம் 21 என்பது தாவீது ராஜாவின் அரச சங்கீதமாகும். இது வெற்றிக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறது. இது பெரும்பாலும் சங்கீதம் 20 இன் (போருக்கு முன் ஒரு பிரார்த்தனை) தொடர்ச்சியாக, போருக்குப் பின் நன்றி கூறும் வண்ணம் காணப்படுகிறது. ஆழமான மேசியானிய விளக்கங்களுடன் இயேசுவை இறுதி ராஜாவாக சுட்டிக்காட்டுவதையும் இந்த சங்கீதம் எடுத்துரைக்கிறது.
20-ஆம் சங்கீதத்தில், இஸ்ரவேல் சபையும் தாவீதும் வரவிருக்கும் போரில் வெற்றிக்காக ஜெபித்தனர். 21-ஆம் சங்கீதம் வெற்றிக்கு நன்றி செலுத்துகிறது மற்றும் வெற்றியைப் பெற்ற கர்த்தரிடமிருந்து வந்த பலத்தைப் பற்றிய தாவீதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
விண்ணப்பத்தை கேட்கும் கடவுள் ராஜாவுக்கு அவரது இதய ஆசைகளை வழங்குவதையும், அவரது ஆட்சியை மகிமை மற்றும் நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிப்பதையும், எதிரிகளை வெல்ல அவருக்கு பலம் அளிப்பதையும் பற்றி வருகிறது. ஆண்டவர் நமது விண்ணப்பத்தை தள்ளாமல், நமது மனவிருப்பத்தின்படியே, தந்தருளி, ஆசீர்வதிப்பாராக.
"ஆசையாய் விண்ணப்பம் செய்
ஆண்டவர் தள்ளாது பதிலளிப்பார்."
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments