*தினமும் வழிபடுவோம்*
சங்கீதம் 5 இறைபாதுகாப்பு வேண்டி, காலை நேரத்தில் தாவீது ஜெபித்த ஜெபம்.
காலையில் தேவாலயத்தில் (தாவீதின் காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த வீடு) சென்று ஜெபிக்கும் பழக்கம் தாவீதுக்கு இருந்தது.
1. தேவ ஆலயம் சென்று வழிபட்டார்.
2. அதிகாலையில் சென்று வழிபட்டார்.
3. பயபக்தியுடன் வழிபட்டார்.
இன்றைக்கு உங்கள் வழிபாடு எப்படி உள்ளது?
ஆலயத்திற்கு அருகில் வீடு இருந்தும் தினமும் ஆலயம் செல்லுகிறீர்களா?
கடவுளின் வீட்டில் பயபக்தியுடன் பணிந்து கொள்ளுகிறீர்களா?
ஆண்டவரை வழிபடும் அனைவரும் மகிழ்ந்து எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பார்கள்.
ஆண்டவர் அவர்களைப் பாதுகாப்பார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments