சங்கீதம் 6 தியானம்
இராமுழுவதும் கண்ணீரா?
சங்கீதம் 6 தாவீது, தனது கீழ்கண்ட சூழலில் பாடியதாகும்.
1. பெலனற்ற நிலை
2. வியாகுலம்
3. பெருமூச்சு
4. துயரம்
5. பகைவரின் நெருக்கம்
இந்தச் சூழலில் தாவீது இரவு முழுவதும் கண்ணீரோடு ஜெபிக்கிறார். ஆண்டவர் அவர் விண்ணப்பத்தைக் கேட்டு பதில் கொடுத்தார். "ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்" என்று அவர் நேர்மறை சூழலில் பாடி முடிக்கிறார்.
கண்ணீர் நிறைந்த சூழலில்,
கடவுளை நோக்கிக் கூப்பிடுங்கள்;
கருணையின் தெய்வம் கரம்பிடித்து நடத்துவார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments