நீதியுள்ள நீதிபதி
சங்கீதம் 7 தாவீது தன்னை, அவதூறு பரப்பும் எதிரிகளிடமிருந்து, ஒருவேளை சவுல் அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்து மீட்கும்படி, கடவுளிடம் மன்றாடுவதாகும். இது ஒரு புலம்பல், நீதிமன்ற முறையீடு மற்றும் விசுவாசத்தின் வெளிப்பாடு.
அவர்கள் தன்னைப் பொய்யாகக் குற்றம் சாட்டிய சூழலில், ஒரு அப்பாவி மனிதனாக கடவுளிடம் அடைக்கலம் தேடி, கடவுளின் நீதியான தீர்ப்பை நம்பி ஜெபிக்கிறார்.
நேர்மையானவர்களுக்கு கடவுளின் பாதுகாப்பு மற்றும் தெய்வீக நீதி ஆகியவற்றின் கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகிறது. தீய சதிகளைச் செய்ய நினைத்தவர்கள் மீது அந்த தீங்கே (பட்டயம், வில், அம்பு) விளைவிக்கும். இது கடவுளின் நீதியைப் புகழ்வதில் உச்சத்தை அடைகிறது.
நீதியின் தேவைத் துதிப்போம்; தேடுவோம். நீதி செய்வாராக.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments