மேன்மையுள்ள நாமம்
தாவீது எழுதியதாகக் கூறப்படும் சங்கீதம் 8, படைப்பில் கடவுளின் மகிமையைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடலாகும். மேலும், மனிதனைப் பற்றி கடவுளின் திட்டத்தையும், அவனது மேன்மையையும் வலியுறுத்துகிறது,
1. படைப்பில் இறைவனின் மகிமை
2. படைப்புகளில் மனிதனின் சிறப்பு
3. படைப்பில் இயேசு என்னும் நாமம்
கடவுளின் மகத்தான படைப்பின் முன் மனிதன் எவ்வளவு சிறியவன், ஆனாலும் கடவுள் அவனுக்குக் கொடுத்திருக்கும் மாபெரும் மதிப்பையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளார் . மற்ற படைப்புகளைக் காட்டிலும் மனிதன் சிறப்பு வாய்ந்தவன்.
குழந்தைகளின் வாயிலிருந்து வரும் புகழ்ச்சியைக் கொண்டு கடவுள் தம்முடைய மகிமையைக் காட்டுகிறார் என்பது இதன் ஒரு முக்கியமான செய்தி. இது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.
பூமியெங்கும் ஆண்டவரின் நாமம் மேன்மையுள்ளது. இயேசு கிறிஸ்து என்னும் நாமம் பூமியில் எவ்வளவு மேன்மையானது, வல்லமையானது; அவர் திருநாமத்தை நாமும் போற்றுவோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments