பெந்தெகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் 10-ம் ஞாயிறு (திரித்துவ ஞாயிறு - 9)
வண்ணம் : பச்சை
திருமறைப் பகுதி
ப.ஏற்பாடு - பிரசங்கி 4:9-12
நிருப வாக்கியம் : எபேசியர் 5:21-33
நற்செய்தி பகுதி : மத்தேயு 19:4-6
சங்கீதம் : 128
2. திருவசன தலைப்பு : ஏற்ற துணையாக வாழ்வதே திருமணம்
ஆதியாகமம் 2:18
திருவசனம் -
(பவர் திருப்புதல்)
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
(திருவிவிலியம்)
"பின்பு, ஆண்டவராகிய கடவுள், 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்' என்றார்"
3. ஞாயிறு தொடர்பு
4. வசன குறிப்புகள்
நூல் குறிப்புகள்:
ஆசிரியர்: மோசே
அவையோர்: இஸ்ரவேலர்
வசன பிண்ணனி:
கர்த்தராகிய ஆண்டவர் வானம், பூமி மற்றும் அதிலுள்ள யாவற்றையும் படைத்து, அவைகளை ஆண்டுகொள்ள மனிதனையும் படைத்தார். எல்லாவற்றையும் நல்லது என்று கண்டார். ஆனால் மனிதனுக்கு உற்ற துணையாக பூமியிலுள்ள எதுவும் ஏற்றவாறு இல்லை என்று கண்டு, தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று எண்ணும்போது சொல்லப்பட்ட வசனம்.
5. திருவசன விளக்கவுரை:
இந்த வசனத்தின் ஆரம்பம் *பின்பு* எனும் பதம் கர்த்தர் முன்பு செய்த காரியத்திலிருந்து தனி கவனம் செலுத்தி இந்த செயலை செய்ய முற்படுவதைக் குறிக்கிறது. கடவுள் மனிதன் மீது காட்டும் தனி கவனம் என்பதால் திருமணம் என்பது மனிதனின் வாழ்வில் இணையில்லாத பொக்கிஷ வாழ்வு(V.18 a).
எல்லாவற்றையும் நல்லது என்ற கர்த்தர், தனிமையை நல்லதல்ல என்று கண்டார். தனிமையைப் போக்க துணையை உண்டாக்கியதால், ஒருமனமாய் வாழ்வது திருமணம் (V.18 b).
*உண்டாக்குவேன்* என்ற பதம் திருமண வாழ்வில் அனைத்தும் கணவரையோ, மனைவியையோ அல்ல கடவுளைச் சார்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது (V. 18 c).
6. நடைமுறை வாழ்வியல்:
திருமணம் என்பது ஆண்டவர் நமக்கு அருளிய பரிசு. அதனை பேணி, பண்புடன் வாழ்வது தான் அவர் அருளிய பரிசுக்கு நன்றியுடன் இருப்பது ஆகும்.
வீழ்ச்சியடைந்த இந்த உலகில், திருமணம் என்பது அழகாகவும் செழுமையூட்டுவதாகவும் இருக்கக்கூடிய திறன் பெற்றிருந்தாலும், அது வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியான இன்பங்கள் பெருகும் ஒரு தொடராகவே இருக்கும் என்பதற்கு எந்த வாக்குறுதிகளும் இல்லை. உண்மையில், ஒரு ஆரோக்கியமான திருமணம் என்பது கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தையே அதிகம் சார்ந்திருக்கும். (ஜேம்ஸ் எக்லிண்டன்)
7..அருளுரை குறிப்புகள்:
அ) இறைவன் தந்த பரிசு - திருமணம் (ஆதி 2:18)
ஆ) இணைந்து ஒன்றாய் வாழ்வது - திருமணம் (மத்தேயு 19:4-6)
இ) இணைந்து கடவுளைச் சார்ந்திருப்பது-திருமணம் (எபேசியர் 5:21-33)
எழுதியவர்
கிறிஸ்து ராசையா
சபை ஊழியர்

0 Comments