Ad Code

திருப்பாடல் தியானம் 47 • உன்னதமான அரசர்

திருப்பாடல் தியானம் 47
உன்னதமான அரசர்

சங்கீதம் 47, கோராகின் புத்திரரின் மகிழ்ச்சியான சங்கீதமாகும். இது ஒரு ஊர்வலத்திற்கான ஒரு வழிபாட்டுப் பாடலாக இருக்கலாம். இஸ்ரவேலுக்கு மட்டுமல்ல, எல்லா தேசங்களுக்கும் மேலான ராஜாவாக கடவுளைக் கொண்டாடும் பாடலாக உள்ளது.

மேலும் இந்த சங்கீதம் கடவுளின் உலகளாவிய ஆட்சியை எதிர்நோக்கும் ஒரு மேசியானிய சங்கீதமாக உள்ளது. மற்றும் இயேசுவின் பரமேறுதலாகிய விண்ணேற்றத்தைக் குறித்தும் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார் (வசனம் 5). 

கடவுள் பூமியெங்கும் ராஜாவாகப் புகழப்படுகிறார், அனைத்து மக்களின் வழிபாட்டையும் கடவுள் விரும்புவதாக சங்கீதகாரர் சொல்லுகிறார். கடவுள் தேசங்களை அடக்கி, தனது மக்களின் சுதந்தரத்தை கொடுக்கிறார். 

உன்னத ராஜாவை
1. கெம்பீரமாய் பாடுவோம் 
2. போற்றிப் பாடுவோம்
3. கருத்தாக பாடுவோம் 

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments