Ad Code

திருப்பாடல் தியானம் 49 • நிலையற்ற வாழ்வில் எதை நம்புகிறோம்? Psalm 49

திருப்பாடல் தியானம் 49
நிலையற்ற வாழ்வில் எதை நம்புகிறோம்?

சங்கீதம் 49, கோராகின் மகன்களால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் ஞான சங்கீதம் இது. பொருள், ஆஸ்தி, & செல்வம் போன்ற செழிப்பில் நம்பிக்கை வைப்பதற்கான விமர்சனமாக இந்த சங்கீதம் செயல்படுகிறது.

உலகளாவிய பார்வையாளர்களை - பணக்காரர் மற்றும் ஏழைகள் குறித்து சிந்திக்க வைக்கிறது. சமுதாயம் பணத்தின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிட்டாலும், இந்த சங்கீதம் செல்வத்தின் வரம்பு குறித்து கற்பிக்கிறது. துன்மார்க்கரின் செழிப்பு தற்காலிகமானது என்பதே மையச் செய்தி. பணத்தால் அழியாமையை வாங்கவோ, ஆன்மாவை மரணத்திலிருந்து மீட்கவோ அல்லது தடுக்கவோ முடியாது என்பதை நினைவூட்டுகிறது. 

சங்கீதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. செல்வத்தால் வரும் பாதுகாப்பை விட, ஆன்மீகத்தின் தேவையில் கவனம் செலுத்த அழைப்பு கொடுக்கிறது. நிலையற்ற வாழ்வில் நிலையான கடவுளை சார்ந்து வாழ்வோம்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments