Ad Code

C. T. ஸ்டட். Studd Missionary Life

இங்கிலாந்து தேசத்தில் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர் தான் திறமைமிக்கவருமாயிருந்தார். 18 வயதிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அவருடைய தந்தையாருடைய சொத்துக்கள் அன்றைய தினத்திலே 1860 களில் இரண்டரை கோடியாக இருந்தது. அவருடைய சொத்துக்கள் பிள்ளைகளுக்கு பிரித்தெடுக்கும் போது இவருக்கு ஒரு பெரிய தொகை வந்தது. 

 ஆனால் மிஷனெரியாக செல்ல முடிவெடுத்த பின் அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் சொத்துக்களை மூடி பிரசங்கியார், ஜார்ஜ் முல்லர், வில்லியம் பூத் போன்ற ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். கொஞ்ச தொகையை மாத்திரம் தனக்கென வைத்துக் கொண்டார். அந்த கொஞ்சத்திலும் கூட மிஷனெரிகளுக்கு கொடுக்கும்படியாக அவரது மனைவி பிரிஸ்ஸிலா அவரைத் தூண்டினார். எனவே மிகக் குறைந்த அளவு பணத்தையே வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் ஊழியங்களுக்கு கொடுத்தார். 

சீனா தேசத்திற்குச் சென்று 10 ஆண்டுகள் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றினார். இவர் நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடிய வீரராக இருந்த போதிலும் கூட, அதை விட்டு விட்டு இயேசுவுக்காக, அவருடைய பரம ராஜ்யத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார்.
 இந்த தேவ மனிதர் அடிக்கடி சொன்ன வாசகம்:
"ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் சீக்கிரமாய் கடந்து போகும்; ஆண்டவருக்காக செய்தது மாத்திரமே நிலைத்திருக்கும்." 
       
..... பிரியமானவர்களே! இந்த உலகில் நமக்கு கிடைத்த எவ்வளவு பெரிய பதவியானாலும் சரி, எவ்வளவு ஆஸ்தியானாலும் சரி, இவையெல்லாம் நாம் தேவனிடமிருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆண்டவர் கிருபையாய் நமக்கு கொடுத்த செல்வங்களை அவர் பணிக்காய் செலவிடுவோம். 

 இயேசுவுக்காய் தங்களுடைய ஆஸ்தியை கொடுத்தவர்கள் எவரையும் அவர் தரித்திரராய் விடுவதில்லை. எனவே நம்முடைய ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியஞ்செய்ய முன் வருவோம். அர்ப்பணித்து ஆனந்தம் அடைவோம்.  

Post a Comment

0 Comments